சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்.

0
309

சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்.

கொரோனா வைரஸ் தொடர்பாக, நடிகர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி, இயக்கியிருக்கிறார்.

திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள ‘அறிவும், அன்பும்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை முதல் முறையாக ஜூம் செயலியின் மூலம் கமல்ஹாசனும், ஜிப்ரானும் இணைந்து இந்தப் பாடலை வெளியிட உள்ளனர்.

பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். மாஸ்டர் லிடியனுடைய இசையுடன் பாடல் தொடங்குகிறது. பாடகர்கள் அவர்கள் வீட்டிலேயே இருந்தபடி இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

பாடகர்கள் ஷங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஶ்ரீ, சித்ஶ்ரீராம், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், தேவி ஶ்ரீ பிரசாத், திரைப்பட நட்சத்திரங்களான ஸ்ருதிஹாசன், அண்ட்ரியா, சித்தார்த், பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ், ஆகியோர் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: