சிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்கச் செய்யும் ஓர் அற்புத மூலிகை!

0
2391

நாம் வாழுகின்ற சூழலில் எண்ணற்ற மூலிகைச் செடிகள் வளா்கின்றன இவற்றை ஒன்றுக்கும் ஆகாத களைச்செடிகள் என்று எண்ணி களைந்துவிடுகின்றோம். இவற்றில் பரவலாக வளரக்கூடிய செடிதான் கோபுரந்தாங்கி!  சித்தர்கள் மனித உடலைக் காக்கும் இந்த அரிய மூலிகையினை கோபுரந்தாங்கி என அழைத்தனர்.

நாா்பட்டையான தண்டுகளில் அடுக்கான இலைகளையுடைய சிறியசெடி, இச்செடி பாா்ப்பதற்கு கோபுரகலசம் போன்ற வடிவில் காணப்படும். இதன் இலை,வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் ஆகிய சத்துக்களை கொண்டிருந்தாலும், எக்கியாயிடின் மற்றும் பிளேவன் போன்ற அாிய வகை தாதுக்களும் அடங்கி உள்ளன.

கோபுரந்தாங்கி மூலிகையானது செம்பு, உப்பு ஆகியவற்றை கரைக்கும் ஆற்றல் மிக்கது, சிறுநீரக கற்களை கரைக்க கோபுரந்தாங்கி குடிநீா் செய்து இரண்டு வாரங்கள் தினமும் இரண்டுவேளை பருகி வர, சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

கோபுரந்தாங்கி, சிருகண்பீளை, யானை நெருஞ்சில் ஆகியசெடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் வெள்ளரிக்காய் விதைகளுடன் காயவைக்க வேண்டும் பின்னா் அரைத்து பொடியாக்கி, 600 மி.லி நீரில் சுட வைத்து,200 மி.லி அளவில் நன்கு சுண்டியதும், காலை இரவு என உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தினமும் பருகி வந்தால் சிறுநீரக எரிச்சல், சூடு குணமாகி, சிறுநீர் நன்றாக வெளியேறும்.

இதற்கு இரத்தத்தை சுத்திகரித்து, உடல் தசை நரம்புகளை வலுவாக்குகின்ற சக்தி உள்ளது.  மேலும் சரும வியாதிகள், தலையில் ஏற்படும் சிரங்கு,புழு வெட்டு ஆகிய அனைத்து விதமான பிரச்னைகளையும் சீர்செய்யும் ஆற்றல் மிக்கது,

கோபுரந்தாங்கி வேரை நன்கு கழுவி, நிழலில் காய வைத்து அரைத்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து நெய்யில் கலந்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் தசைகள், எலும்பு நரம்புகள் நன்கு வலுவேறி, உடல் உற்சாகத்தை மேம்படுத்தும்.

கோபுரந்தாங்கி இலைகளை ஐம்பது எடுத்து அரைத்து பிழிந்து சாறெடுத்து வாணலியில் கால் லிட்டர் நல்லெண்ணை விட்டு,சாற்றை எண்ணையில் கலந்து,நன்றாக காய்ச்ச வேண்டும். பின்னர் எண்ணை ஆறியதும், ஒரு குடுவையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

கோபுரந்தாங்கி தைலத்தை குளிக்க செல்லும் முன் இதனை தலையில் வைத்து மசாஐ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்து வர உடல் குளிர்ச்சி அடைவதோடு தலைமுடி உதிர்தல் பாதிப்பிலிருந்து விடுதலை தரும்.

கொத்துகொத்தாக தலைமுடி சில இடங்களில் கொட்டி இருக்கும் இடத்தை புழு வெட்டு என சொல்வாா்கள் இது பூச்சிகளின் கடியினாலோ அல்லது அவற்றின் எச்சத்தாலோ உண்டாகும், இவறை நீக்க கோபுரந்தாங்கி தைலத்தை தலையில் நன்கு தேய்த்து குளித்து வந்தால் புழு வெட்டு நீங்கி முடி அடா்த்தியாக வளரும்.நீங்கள் குறைந்தபட்சம் பத்து பதினைந்து வாரங்கள் தேய்த்து குளித்து வர வேண்டும், இதனால் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மனப்பாரம் குறைந்து நோய்யற்ற வாழ்வு வாழுங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: