கொழும்பில் பரபரப்பு! இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

0

கொழும்பில் பரபரப்பு! இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

சமகால அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையால் கொழும்பு நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதும் இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

அன்றிரவு காலிமுகத்திடலில் திடீரென புகுந்த படையினர் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதுடன், பெரும் வன்முறையும் வெடித்திருந்தது.

இன்றையதினம் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார்.

பரபரப்பான நேர்தில் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள இந்த விஜயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.08.2022 Today Rasi Palan 09-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇந்த ராசிக்காரர்களே! எச்சரிக்கையாக இருங்கள்! வார ராசிபலன் (07.08.2022-13.08.2022)!