கொரோனா நிவாரண நிதியாக ரசிகர்களுடைய வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்திய தளபதி விஜய்.

தமிழகம் முழுவதும் தளபதி விஜய்யின் உத்தரவின்படி மக்கள் மன்றத்தினர் உதவி செய்து வருகின்றனர். கொரோனா தொடங்கியதிலிருந்து உடனே மக்கள் மன்ற நிர்வாகிகள் ஊடாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் அந்த வகையில் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்துடன் , இரவு பகல் பாராமல் சேவையாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் எல்லோருக்கும் சாப்பாடுடன் சானிடைசர்கள், மாஸ்க்குகள் ஆகியன வழங்கப்பட்டன.
இதுகுறித்து விஜய் பற்றி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: “தளபதி எப்போதுமே தான் அளிக்கும் உதவிகள் நேரடியாக மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று எண்ணுவது வழக்கம். கஜா புயலின் போது மாவட் டங்களில் இருக்கும் தனது மன்ற தலைவர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பி உதவி செய்ய வைத்தார்”.
தளபதி விஜய் அவா்கள் கொரோனா நிவாரண நிதியாக ரசிகர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த உதவிகள் அனைதும் மக்கள் மன்ற மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக விஜய் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
இவருடன் அடிக்கடி பேசும் விஜய் தமிழக மக்களின் நிலையையும் கவனத்தில் எடுத்து விசாரித்து வருகிறார். அதே நேரத்தில் நிர்வாகிகள் யாரும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்பதையும் அறிவுறுத்தி வருகிறார்.
By: Tamilpiththan