கொரோனாவினால் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல்,நாய் வாசலில் 3மாதம்காத்திருந்த துயரம்..!

0
940

கொரோனாவினால் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் நாய் ஒன்று மருத்துவமனை வாசலில் 3 மாதங்கள் அவருக்காக தவித்தபடியே காத்திருந்த துயரம்..!

சீனாவின் வூகான் நகரை சேர்ந்த ஒருவர், நாயை 7 வருடங்கள் மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில்தான் வூகானில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இந்த நோய் எஜமானுக்கும் வந்ததால் தான் வளர்த்து வந்த நாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் நோயின் தாக்கத்திலிருந்து மீளமுடியாமல் எஜமானர் பரிதாபமாக பலியானார்.

ஆனால் எதுவும் தெரியாத அந்த ஜீவன் மருத்துவமனை வாசலிலே 3 மாதமாக எஜமானர் வந்து விடுவார் என்று காத்திருந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் துரத்தியும் நாய் அங்கிருந்து வெளியேறாமல் இருந்துள்ளது. 3 மாதமும் மருத்துவமனை ஊழியர்களே அதற்கு உணவும் அளித்து வந்துள்ளனர். கடந்த 20ம் திக‌தி மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த நாயை காப்பகம் ஒன்றில் ஒப்படைத்துள்ளனர். ஆனாலும் எஜமானருக்காக 3 மாசமாக அந்த நாய் உட்கார்ந்திருந்த இடத்தை இப்போதுகூட நினைவுகூர்ந்தபடியே மருத்துவமனை ஊழியர்கள் கடந்து செல்கிறார்கள்..!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: