கொதித்த‌ தண்ணீரை மீண்டும் கொதிக்க‍ வைத்து குடிக்கலாமா?

0

உங்களுக்கு தெரியுமா? ஒருமுறை கொதிக்கவைத்த தண்ணீரை மறுபடியும் கொதிக்க வைக்கும்போது அதிலுள்ள இரசாயன சேர்மங்கள் மீண்டும் மாற்றமடைவதனால், அது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதாவது நீரை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கும்போது, நீரில் உள்ள ஆபத்தான கூறுகள் நீரிலிருந்து வெளியேறுவதற்கு பதிலாக நீரிலேயே சேமிக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறாக மீண்டும் கொதிக்க வைக்கப்படும் தண்ணீரினால் உருவாகக் கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்களை பற்றி நோக்கின்,

ஏற்கனவே கொதித்த நீரினை மீண்டும் கொதிக்க வைக்கும் போது அந்நீரில் நைட்ரேட், ஆர்சனிக் மற்றும் ஃபுளோரைடு போன்ற பொருட்கள் இருக்கும். இங்க நாம் ஒரு கேள்வியை கேட்பது நல்லது. அது என்னவென்றால், நீங்கள் கடைகளில் வாங்கும் போத்திலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் ஆர்சனிக் உள்ளது எனத் தெரிந்தால் நீங்கள் Sஅதனை வாங்குவீர்களா? நிச்சயமாக வாங்கமாட்டிர்கள்! பின்னர் மீண்டும் கொதிக்க வைக்கும் தண்ணீரில் ஆர்சனிக் இருக்க வாய்ப்பிருக்கும்போது எதற்காக அத்தகைய நீரை மீண்டும் குளிர்விக்கிறீர்கள்? இங்கு உதாரணமாக, நீரில் சேகரிக்கப்படும் கல்சியம் மற்றும் உப்புக்கள் போன்றன பித்தப்பைக் கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.

பொதுவாக அதிக வெப்பநிலையில் நீரை கொதிக்க வைக்கும் போது நைட்ரேட்கள் வெளிப்படுவது வழமை என்ற வகையில், கொதிக்க வைத்த நீரை மீண்டும் சூடேற்றும்போது, உயர் வெப்பநிலையில் நைட்ரேட்டின் தன்மைகளை முற்றிலுமாக மாற்றி நைட்ரேட்டுகளை, நைட்ரோசமைன்களாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த நைட்ரோசமைன்கள் கார்சினோஜெனிக் ஆகும் என்பது இங்கு குறிப்பிடதக்க ஒன்றாகும்.

நீங்கள் கொதித்த நீரை மீண்டும் கொதிக்க வைத்து பருகி வரும் போது காலப்போக்கில் ஆர்சனிக் நஞ்சூட்டத்தால் பாதிக்கப்பட்டு நரம்பு பிரச்சனைகள், புற்றுநோய், இதய நோய், மற்றும் மலட்டுத்தன்மை என மிகவும் கடுமையான சுகாதார பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

மேலும் நீங்கள் அதிகப்படியான ஃபுளோரைடு எடுத்துக்கொள்ளும்போது நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை உணர முடிவதுடன், குழந்தைகள் நினைவாற்றல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வந்தபோது ஏற்பட்ட‌ பரிதாபம்!
Next articleபுதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம் சிம்ம ராசிக்காரர்களே!