கேவலமாக திட்டும் நெட்டிசன்கள். கமலின் பிறந்தநாள் அன்று மீரா மிதுன், கமல் குறித்து போட்ட பதிவு!

0

கேவலமாக திட்டும் நெட்டிசன்கள். கமலின் பிறந்தநாள் அன்று மீரா மிதுன், கமல் குறித்து போட்ட பதிவு!

தமிழ் திரையுலகத்தில் 60 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இரண்டு தலைமுறைகளாக இருந்து வரும் கமல் இன்று(அக்டோபர் 7) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி 7) கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான மீரா மிதுன், கமல் குறித்து பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்டுள்ளார்.

நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கட்சி தலைவர் என்று கலைத்துறையில் பன்முகங்கள் கொண்ட கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். சொல்லப்போனால் பிக் தொகுப்பாளராகவும் மேடை மூலம் தான் கமல் தனது அரசியல் பயணம் குறித்து அறிவித்திருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் கமல். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் வாசிகள் மீரா மிதுனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமே கமல் குறித்து சமீபத்தில் தான் மீரா மிதுன் கழுவி ஊற்றி வந்தார். மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘அக்னி பிக் படத்தில் கமிட் ஆகியிருந்தார். ஆனால், பின்னர் அவருக்கு பதிலாக கமலின் மகள் அக்சரா ஹாசன் கமிட் செய்யப்பட்டார். இதனால் கடுப்பான மீரா மிதுன், சினிமா துறையில் பிரபலமான குடும்பம். தங்களுடைய செல்வாக்கின் மூலம் அவருடைய மகளை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சி இல்லையா? இது தவறான செயல் இல்லையா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கமல் குறித்து இப்படி பேசிவிட்டு தற்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மீராவின் இரட்டை வேஷத்தை ட்விட்டர் வாசிகள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தனது 65 வது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடிக்கு சென்றார் கமல்ஹாசன். நேற்று இரவு சென்னையில் இருந்து மதுரை வந்த இரவு அங்கிருந்து காரில் பரமகுடிக்கு சென்றார். அங்கேய் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் மறைந்த தனது தந்தைக்கு சிலையை திறந்து வைத்தார் கமல். மேலும், இன்று காலை பரமக்குடியில் உள்ள தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடினார் கமல். அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணா பின்னா போஸ் கொடுத்த ஜி வி பிரகாஷ் பட நடிகை, இது உள்ளாடையா வெளியாடையா!
Next articleநடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பிரபல நடிகருடன் காதல். அந்த நடிகருக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா.