கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க வேண்டுமா!

0

கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க வேண்டுமா!

ஆழ்ந்த தூக்கத்தில் வரக்கூடிய கனவுகள் என்பது நம் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் ஆசைகள் நிராசையான தன் வெளிப்பாடே என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதிலும் இயல்பாகவே பகல் கனவு காணாதே என்று வேடிக்கையாக சொல்வது உண்டு.

அதாவது பகலில் கனவு கண்டால் பலிக்காது என்பதன் அர்த்தமே இது. அதுவே இரவு தூக்கத்தில் அதிலும் விடியற்காலையில் நாம் காணும் கனவு பலிக்கும் என்று நம்பப்படுகிற
இரவில் உறங்கும் போது கனவு வருவது இயற்கையானது தான். பல நேரங்களில் நல்ல கனவுகளும் சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வந்து போகிறது.

இதற்குப் பல காரணங்களை நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ‘கனாக் கண்டேன் தோழி’ என்று ஆண்டாள் நல்ல தொரு கனவு கண்டாள் அல்லவா? அதே போன்று கனவுகள் தோன்றும்போது நாம் மகிழ்ந்திருக்கலாம்.

ஆனால் கெட்ட கனவுகள் வரும்போது… நிச்சயம் மனம் வாடிவிடும். சில கனவுகள் கண்விழித்ததும் மறந்து விடும். ஆனால் சில கனவுகளோ திரைப்படம் போல மனதில் நின்று அச்சுறுத்தும். சில கனவுகள் கலவையாக இருக்கும். நினைவுக்கு வராமல் இருக்கும்.

விடியற்காலை கனவுகள் பலித்துவிடும் என்ற அச்சத்தில் அந்த நாள் நமக்கு ஓடுவதே இல்லை. நல்ல கனவுகள் பலிக்கட்டும் என்று நினைக்கும் நாம் கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க சில எளிய பரிகாரங்களை கடைப்பிடிக்கலாம்.

முதலில் நாம் கண்ட கெட்ட கனவு குறித்து யாரிடமும் கூற கூடாது. அனைவரும் கெட்ட கனவு வந்தவுடன் அச்சத்தில் செய்வதறியாது மனம் விட்டு புலம்பி விடுவோம். ஆனால் கனவுகளை வெளியே சொல்லாமல் இருப்பதே நல்லது.

அடுத்து காலையில் எழுந்த உடன் குளித்து விட்டு பசுவின் முன் சென்று புல், வாழைப்பழம், அகத்தி கீரை ஆகியவற்றை பசுவிற்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு நாம் கண்ட கனவு பலிக்க கூடாது என்று அந்த பசுவின் முன் நின்று மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு “அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என்கிற மந்திரத்தை கூறி விஷ்ணுவை வேண்டிக்கொண்டால் கெட்ட கனவால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅழகில் ஜொலிக்கணுமா தேனுடன் இலவங்கப் பொடியை சேர்த்து சாப்பிடுங்க!
Next articleஇன்றைய உலகில் திகிலூட்டும் எதிர்மறையான சக்திகள் இருப்பது உண்மையா?