குவியும் லைக்ஸ், சொந்த ஊரில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் கட்டிய சூப்பரான வீடு!
சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்— ராஜலட்சுமி இவர்கள் புதிதாக வீடு ஒன்று கட்டியுள்ளார்கள். மேலும், இந்த வீட்டில் பால் காய்ச்சு உள்ளார்கள். மேலும்,புது வீட்டின் புகைப்படத்தை காய்ச்சு பதிவு செய்தவர்கள். செந்தில் கணேஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டவர். இந்த ஊர் புஞ்சை, நஞ்சை என விவசாயம் செய்யும் ஊர் ஆகும்.
அங்கு விவசாயம் செய்பவர்கள் எல்லாம் கலைப்பு தெரியாமல் இருப்பதற்காக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது வழக்கம். அப்படி பாடலை பாட தொடங்கியது நம்ம செந்தில் கணேஷ். மேலும், இவர் எட்டு வயதாக இருக்கும் போது கவிதைகள், பாடல்கள், எழுதுவதில் அதிக ஆர்வம் உடையவராம். அதன் மூலம் தான் நிறைய பாடல்களை எழுதி பாடியுள்ளார்.
மேலும்,கொஞ்சம் கொஞ்சமாக பாடல்களை எழுதி கலைஞர்களை சேர்த்து ஒரு நாட்டுப்புற கலைஞர் குழுவையே உருவாக்கினார் என்றும் சொல்லலாம். தற்போது செந்தில் கணேஷ் தன்னுடைய சொந்த ஊரான களபத்தில் வீடு ஒன்று கட்டி உள்ளார். மேலும், இந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து,பால் காய்ச்சி உள்ளார்கள்.
மேலும் கிரக பிரவேசம் செய்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். அதோடு என் தாய்,தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டேன் என்று உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டு உள்ளார். மேலும், இது குறித்து ரசிகர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இருவருக்கும் இணையங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
காமெடி நடிகர் சதீஸின் மச்சான் சொன்ன பதில். இவர் ராஜலக்ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டும் இல்லாமல் இவரும் ஒரு நாட்டுப்புற கலைஞர் தான். தற்போது இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும்,பெண் குழந்தையும் உள்ளது. மேலும்,இவர்கள் இருவரும் இணைந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி உள்ளார்கள்.
அதோடு இவர்கள் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி உலகம் முழுவதும் பரப்பியவர்கள். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மேலும், இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.
பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். மேலும்,போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார். மேலும், இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டை தட்டிச் சென்றார். மேலும்,இந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.
மேலும், தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல் தெறிக்கவிட்டது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாட்டை அதிகம் விரும்பி கேட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இவர்கள் பிரபலமானார்கள்.