குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் இருந்தால் இவற்றை சாப்பிடுங்க சீக்கிரம் குழந்தை உண்டாகும் !

0
2738

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான பெருமை என்றே சொல்லலாம். ஒரு பெண் தாயாகும் போது அவள் படும் மகிழ்ச்சியின் அளவுக்கு எல்லையே இல்லை. ஆனால் அப்படிப்பட்ட தாய்மை சில பெண்களுக்கு கிடைப்பதும் இல்லை சில பேருக்கு உடல் நல பிரச்சினைகளே தடையாக இருக்கிறது. இதற்கு நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம்.

நம் வீட்டில் இருக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் சீக்கிரம் நீங்கள் தாய்மை அடையலாம். இந்த பொருட்கள் உங்கள் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்தி கருச்சிதைவு ஏற்படாமலும் தடுக்கிறது. சரி வாங்க கர்ப்பத்திற்கு உதவும் சில பொருட்களை பற்றி இப்பகுதியில் காணலாம்.

கர்ப்பம் தரிக்க உதவுவதில் கொண்டைக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் கர்ப்ப பை ஊட்டச்சத்திற்கு உதவுகிறது.

மாதுளை கர்ப்ப பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கருப்பை சுவர்களை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அதே நேரத்தில் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்தி எளிதில் கர்ப்பம் தரிக்க உதவுகிறது.

பச்சையிலை காய்கறிகளில் நிறைய போலிக் அமிலம், இரும்புச் சத்து போன்றவைகள் உள்ளன. அதே மாதிரி கருப்பையின் உள்ளடுக்குகள் நன்றாக வலிமையடையவும் உதவுகிறது. இரும்புச் சத்து கர்ப்ப பையின் ஷைச்கோட் இணைப்பிற்கு உதவுகிறது.

குழந்தை பாக்கியமின்மைக்கு ஆலிவ் ஆயில் ஒரு சிறந்த மருந்தாகும். இதிலுள்ள மோனோசேச்சுரேட் கொழுப்பு பெண்களின் இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மனித இனப்பெருக்கம் மற்றும் கருக்கலைப்புக்கான ஐரோப்பிய சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் 2010 ஆம் ஆண்டு ஆய்வின் படி ஆலிவ் ஆயிலில் உள்ள மேனோசேச்சுரேட் கொழுப்பு பெண்களுக்கு இயற்கையாகவே செயற்கை கருத்தரித்தலை உண்டாக்குகிறது என்று கூறுகின்றனர்.

ஜஸ் க்ரீமில் உள்ள கொழுப்பு கர்ப்ப கால ஹார்மோனை தூண்டி சீக்கிரம் தாய்மையை தருகிறது.

பூண்டில் உள்ள செலினியம் தாது கருச்சிதைவை தடுப்பதோடு கர்ப்பம் தரிக்கவும் உதவுகிறது.

பூசணிக்காய் விதைகளில் உள்ள அதிகளவு இரும்புச் சத்து சீக்கிரம் கர்ப்பமடைய உதவி புரிகிறது.

நீங்கள் சீக்கிரம் தாய்மை அடைய நினைத்தால் வேக வைத்த உருளைக்கிழங்கை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் பி மற்றும் ஈ செல்பிரிதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப பைக்கு பயன்படுகிறது.

பன்னீரில் உள்ள புரோட்டீன் பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது சீக்கிரம் தாய்மை அடைய உதவும் சிறந்த இயற்கை உணவு.

பிரக்கோலி கர்ப்பம் தரிக்க உதவும் சூப்பர் உணவாகும். இதிலுள்ள போலிக் அமிலம், இரும்புச் சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவை பெண்களின் கர்ப்ப பை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் சி கருமுட்டை முதிர்ச்சி அடைந்து ஓவுலேசன் செயல் நடக்க பயன்படுகிறது.

நட்ஸ் வகைகள் அனைத்தும் பெண்களின் தாய்மைக்கு சிறந்தது. அதிலும் பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தாய்மை அடைய பெரிதும் உதவுகிறது.

நல்ல காரசாரமான உணவுகளும் நீங்கள் தாய்மை அடைய பெரிதும் உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் அதிகரித்து இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

பெண்கள் கர்ப்பம் தரிக்க நினைத்தால் விட்டமின் பி6 அடங்கிய வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள். இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சரியாக்குவதோடு தாய்மை அடையவும் உறுதுணை புரிகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாதவிடாயை அசிங்கமாக நினைப்பவர்களுக்கு! பெண்களின் அவலநிலை இதுதான்!
Next articleஅடிக்கடி மார்புல குத்துற மாதிரி இருக்கா? உடனே என்ன செய்யணும்?