ரோகிணி நட்சத்திரம்
மன அமைதியை விரும்பும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே!
இந்த குருபெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறப் போகிறிர்கள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும்.
அதைப் பயன்படுத்தி உங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். தொழிலைப் பொறுத்தவரை இதுவரை இருந்து வந்த மந்த நிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். ஆர்டர் தராமல்திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் அவர்கள் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அனைவராலும் கேளிக்கைக்கு ஆளாகிய நீங்கள் குருவின் அனுகிரகத்தால் ஓரளவிற்கு மதிப்பு, மரியாதையுடன் நடத்தப்பெறுவீர்கள்.
பெண்களில் சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். திருமண வாழ்வில் விவாகரத்து வரை சென்றவர்கள் கூட குருவின் கடாட்சத்தால் பிரச்னைகள் தீர்ந்து சேர வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பணியில் தொய்வு வரலாம். அதிரடி முடிவுகள் கட்சியில் எடுக்கப்படும். கலைத்துறையினருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். அழகு கூடி காட்சியளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து உங்களை மெருகேற்றும்.
மிருகசீரிஷ நட்சத்திரம்
நினைத்ததை நிறைவேற்றத்துடிக்கும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே!
இந்த குருபெயர்ச்சியைப் பொருத்தவரை நீண்டநாட்களாக இருந்து வந்த கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் ஆடை, ஆபரணம், வாகனம் போன்ற நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும்.
புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம்.
தொழில் – வியாபாரத்தில் ஏற்றுமதி – இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும். உங்களுக்கு தொழிலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்குகள் நல்ல முறையில் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதால் உங்கள் நிலையும் உயரும்.
உத்யோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கடன் வாங்கியிருந்தால் வரும் காலங்களில் அதை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். தொலைந்து போன சில ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் புதிய ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள்.
கொடுத்த கடன்கள் ஓரளவிற்கு திருப்பிக் கிடைக்கும். மாணவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகரிக்கும். மேற்படிப்பு விஷயங்கள் தள்ளிப் போய்க் கோண்டிருந்ததல்லவா இப்போது அது சரியாகி உங்கள் கல்வியைத் தொடர அழைப்புகள் வரும்.
அரசியல் துறையினர் தானுண்டு தன் வேலையுண்டு என்று உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள்.
கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உங்கள் பெயரை முன்மொழிவார்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.
திருவாதிரை நட்சத்திரம்
வாய் ஜாலத்தில் மற்றவரை தோற்கடிக்கும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களே!
இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் நன்மை நடக்கும் என்பதில் ஐயமில்லை. குடும்பத்தில் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
தொழிலில் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும் அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல லாபத்தை குரு பகவான் கொடுப்பார்.
வண்டி, வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலில் இருப்போர் நல்ல வளர்ச்சியைக் காண முடியும். உத்யோகஸ்தர்களுக்கு பண விஷயங்கள் சீராகும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக் காணப்படும்.
பெண்களின் உடலுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகள் தேவையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும்.
உடனே கவனித்தால் பெரிய பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைகள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து அதில் பரிசுகளும், ஷீல்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு மூத்த அரசியல்வாதிகள் உங்களுக்கு நல் வாக்கு வழங்குவார்கள்.
கலைத்துறையினருக்கு நாடகக் கலைஞர்களும், மேடைக் கலைஞர்களும் நல்ல உயர்வான நிலையை அடைவார்கள். மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதல்ல.