கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் குருவால் பேரதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள் இவர்கள் தான்! யோகத்தை அள்ளபோகும் அற்புத காலம்!

0

கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் குருவால் பேரதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள் இவர்கள் தான்! யோகத்தை அள்ளபோகும் அற்புத காலம்!

பெயர்ச்சியாகும் குரு பகவான்

வருடத்துக்கு ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

குரு பகவான் கும்ப ராசியில் அமர்ந்திருப்பதன் அடிப்படையில் குரு நல்ல அதிர்ஷ்ட பார்வை பலனைப் பெறப்போகும் 6 ராசிகளை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் ராசிக்காரர்கள்!
குரு பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறபோகும் 6 ராசிகளில் மிகவும் அதிக நற்பலனை அடையப்போவது மேஷ ராசி. ஏனெனில் குருவுக்கு நண்பரான செவ்வாய் ஆளக்கூடிய ராசி மேஷம் என்பதால், நிச்சயம் அளப்பரிய நன்மைகள் அனைத்து தரப்பினரும் அடையலாம். ஆனால் குலதெய்வ வழிபாடு அவசியமாம்.

மிதுனம் ராசிக்காரர்கள்!
குரு பெயர்ச்சியால் யோகத்தை அள்ளபோகும் அடுத்த ராசி மிதுனம். ஏற்கனவே அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள்.

இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறைவதோடு, இஷ்ட தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டு வருதல் நல்லது.

சிம்மம் ராசிக்காரர்கள்!
குரு பகவானின் பார்வை அமைப்பால் இதுவரை சங்கடங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசிக்கு தற்போது பேரதிர்ஷ்டமாம்.

தற்போது குருவின் நேர் எதிர் பார்வையான 7ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிகவும் விசேஷமானது. 5, 8ம் இடத்திற்கு உரிய குரு பகவான். 5ம் இடத்தின் வேலையை 7ம் இடத்தில் அமர்ந்து செய்வதால் அனைத்தும் நன்மையாகவே முடியும்.

குரு பகவான்

துலாம் ராசிக்காரர்கள்!
துலாம் ராசிக்கு இதுவரை குரு பகவான் 4ம் இடத்தில் அமர்ந்திருந்தார். அதாவது தடை ஸ்தானத்தில் இருந்த குரு, தற்போது 5ம் இடத்திற்கு செல்கிறார்.

குரு நின்ற இடத்தை விட, அவரின் பார்வை பலன் அதிகம் என்பது ஜோதிட விதி. அதிலும் குருவின் 9ம் பார்வை மிக சிறப்பானது. இதுவரை தடைப்பட்டு வந்த எந்தவொரு காரியமாக இருந்தாலும், அனைத்திலும் வெற்றி தானாம்.

தனுசு ராசிக்காரர்கள்!
தனுசு ராசிக்கு குரு நீச்ச ஸ்தானத்தில் இருந்தார். தற்போது ராசிக்கு 3ம் இடமான தைரியம், வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். ராசிக்கு 3ம் இடத்திலிருந்தாலும், குருவின் சிறப்பான பார்வை பெறும் இடங்களின் அடிப்படையில் தனுசு ராசியினர் மிக சிறப்பான பலனைப் பெறுவார்கள்.

குருவின் பார்வை, ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், இந்த இடங்களில் கிடைக்கும் நற்பலன்களால் அதிர்ஷம் பெறும் ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று. எந்த ஒரு முயற்சிகளும் வெற்றி தரும்.

கும்பம் ராசிக்காரர்கள்!
குரு பகவான் ஜென்ம குருவாக கும்பத்திற்கு அமர்கிறார். இதைத் தவிர எல்லாமே உங்களுக்கு சிறப்பானதாக தான் இருக்கிறது. குருவின் பார்வையால் யோகம் அடையக்கூடிய ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று.

ஜென்ம குருவாக இருந்தாலும், அவரின் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிவதால் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் குழந்தை பேறு உண்டாகும்.

விரய சனியின் தக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கும்ப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியால் ஆறுதல் தருவதாகவும், அதைத் தாண்டி அதிர்ஷ்டம் தருவதாகவும் இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 10.11.2021 Today Rasi Palan 10-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 11.11.2021 Today Rasi Palan 11-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!