கும்பம் ராசிக்காரர்களுக்கான புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கப்போகிறது! புதிய வருடம் என்ன யோகத்தை தர இருக்கிற்து!
பிறக்கும் 2022 புத்தாண்டின் முதல் கும்ப ராசிகாரர்களுக்கு அற்புத பலன்கள் கிடைக்க இருக்கிறது. மற்றவர்களுடைய கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கும்ப ராசிக்காரர்கள் தங்களுடைய கருத்துகளை முன் வைப்பதிலும் தயங்குவதில்லை.
புத்தாண்டு பிறக்கும் வேளையில் சுக்கிரன் மிகவும் சாதகமான ராசி நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். வீடு மனை வாங்கும் முயற்சிகளும் பயன்தரும்.
குடும்பத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவ இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. போதுமான நேரத்தை குடும்பத்திற்காக செலவிடுவது நல்லது.
புதனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். பேச்சிலும் சாமர்த்தியம் கூடிவரும். எதிரிகளையும் பேச்சால் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். பிரச்னை ஏற்பட்டுப் பிரிந்து சென்ற சொந்த-பந்தங்கள் இணைவார்கள். வீட்டிலும் வெளியிலும் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். செவ்வாய் பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நிலம் சம்பந்தப் பட்ட விஷயங்கள் லாபகரமாக அமையும்.
இந்தாண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது. புதிய நபரின் வருகை உண்டு. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.
கடந்த 2021-ம் ஆண்டில் நீங்கள் தேவையற்ற இழப்புக்களைச் சந்தித்து இருப்பீர்கள். ராகு – கேதுவைப் பொறுத்தவரை 20.3.22 வரை உங்கள் ராசிக்கு 10 ல் கேதுவும் 4 ல் ராகும் சஞ்சரிக்கிறார்கள். இதனால் பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு குறையாமல் இருக்கும். இடமாற்றம், சம்பளப் பிரச்னை, சலுகைகளில் பிடித்தம் என்று பல்வேறு நெருக்கடிகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் 2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் உங்களுக்கு பொறுப்பு சுமையை குறைக்க இருக்கிறது. குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வாடிக்கையாளர்கள் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க இருக்கிறது.
கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் காதல் மேலும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு.
மார்ச் 21 ஆம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9 ஆம் வீட்டுக்கு கேது பெயர்ச்சி ஆவதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு உண்டாகும். சிறு சிகிச்சையின் மூலம் சரியாகும். ராகு 3 ஆம் வீட்டிற்குக் குடிபுகுவது மிகவும் சாதகமான அம்சமாகும். மனதில் இருந்த பயம், டென்ஷன் ஆகியன நீங்கும். இதுவரை முயற்சி செய்தும் முடியாமல் போன விஷயங்கள் சாதகமாகும். சகோதர வகையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பங்குச்சந்தை லாபம் தரும்.
திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நபரை திருமணம் புரிய நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். புதன் கிழமையில் புத பகவானை வழிபடுவது சிறப்பு.
குருபகவான் ஆண்டின் தொடக்கம் முதல் 13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே இருந்து பலன் கொடுப்பதால் பணிச்சுமை அதிகமாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து நீங்கும்.
மேலும் உங்கள் ராசிக்கு 2022ம் ஆண்டு மகாலட்சுமிக்கு நெய் தீபம் போடுவது நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். ஆனால் 14.4.2022 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசியை விட்டு குரு விலகி 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் சொல் பேச்சுக் கேட்டு நடப்பார். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.