கிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஓவியா.

0
1079

கிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி விட்டதை அடுத்து ஓவியாவை புதிய படங்களில் நடிக்க வைக்க பலரும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஏற்கனவே ஓவியா நடித்திருந்த சீனி படத்தை பெயர் மாற்றம் செய்து வெளியிட தயாராகி வருகிறார்கள். விஜய்யின் புதிய படத்திலும் ஓவியாவை நடிக்க வைக்க முருகதாஸ் முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களில் நடித்துள்ள ஓவியாவை, அரிமா நம்பி பட இயக்குனர் ஆனந்த் ஷங்கரும், தனது புதிய படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். ஓவியா மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். அதனால் அவரை எனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க வாய்ப்பு உள்ளது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே நடித்த யாமிருக்க பயமேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் மீண்டும் ஓவியா நடிக்கிறார். கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஓவியா உள்பட சில நடிகைகள் நடித்திருந்தனர். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஓவியாவே முக்கிய நாயகியாக நடிக்கிறாராம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: