கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி இருமலை ஒரே நாளில் போக்க சிறந்த வைத்தியம்!

0

கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி இருமலை ஒரே நாளில் போக்க சிறந்த வைத்தியம்!

இருமலை போக்க

இருமலானது இரண்டு வகையில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி, நுரையீரலுக்கு பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

மற்றொரு வகை இருமலானது, தூசு, ரசாயனம் போன்ற பல விதமான கிருமிகள் காரணங்களால் அலர்ஜி போன்று தொடர்ச்சியான வறட்டு இருமல் ஏற்படுகிறது.

வறட்டு இருமலை நிரந்தரமாக குணப்படுத்த, சூப்பரான டிப்ஸ் இதோ

தேவையான பொருட்கள்

பால்- 1 டம்ளர், தேன் – 1 டேபிள் ஸ்பூன்,முட்டை மஞ்சள் கரு–1

செய்முறை

பாலை நன்றாக சூடுபடுத்தி அந்த பால் பொங்கி வரும் போது முட்டையின் மஞ்சள் கருவை கலந்து நன்றாக கலக்க வேண்டும்.

பின் அந்த பால் இளஞ்சூடாக இருக்கும் போது, அதில் தேன் கலந்து, அதை தினமும் இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் குடித்து வர வேண்டும். இதனால் தீராத வறட்டு இருமல் குணமாகிவிடும்.

மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும்  மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல்  காணாமல் போகும்.

சின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரண்டாவது தடவையும் மாரடைப்பு வராமல் இருப்பதற்கு!
Next articleபெண்களுக்கு மாதவிலக்கின் போது அவஸ்தையா? பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை இப்படி சாப்பிடுங்க!