காதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா?

0

காதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் பலம் பெற்றிருப்பது அவசியம்.

ஒருவரது காதல் வெற்றியடையுமா, தோல்வியடையும் என்பதைத் இந்த ஐந்து கிரகங்கள் இருக்கும் இடங்கள் பார்வை ஆகியவற்றை கொண்டு தான் தீர்மானிக்கின்றது.

ஒருவரது ஜாதகத்தில் முக்கிய கிரகங்களின் அதிபதிகள் ஒன்றோடொன்று இணையும் போது காதல் திருமணம் நடைபெறுகிறது.

ஐந்தாம் அதிபதி 7-ல் அல்லது ஏழாம் அதிபதி 5-ல் இருந்தால் காதல் திருமணம் நடைபெறுவது நிச்சயம்.

ஒன்பதால் அதிபதி அல்லது குரு கெட்டால், எதிர்ப்புக்கு மீறிக் காதல் திருமணம் நடைபெறும்.
1, 5, 7, 9 பாவங்கள் தொடர்பு இருந்தாலும் காதல் திருமணம் நிகழும்.

ஆண்/பெண் இருவரின் சுக்ரன் செவ்வாய் ஒரே பாகையானால் எதைப்பற்றியும், யாதைப் பற்றியும் கவலைப்படாமல் திருமணம் செய்துகொள்வர்.

7-ம் அதிபதியும் சுக்ரனும் சனியினால் பார்க்கப்பட்டால் கட்டாயம் காதல் திருமணம் நடைபெறும்.
7-ல் ராகு/கேது சந்திரன், புதன் இருந்தாலும் காதல் திருமணம் தான்.

பொதுவாக ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ஆகிய ராசிகள் காதல் வயப்படும் ராசிகள் ஆகும்.

பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து, நட்சத்திர நாயகன் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலம் கூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்?
Next articleஇன்றைய ராசிப்பலன் வியாழக்கிழமை 02.08.2018 !