கமலை மட்டும் பேட்டி எடுக்கவே மாட்டேன் என்று சொன்ன டிடி, அவருது பிறந்தநாள் அன்று இப்படி சொல்லிட்டாரே டிடி!

0

கமலை மட்டும் பேட்டி எடுக்கவே மாட்டேன் என்று சொன்ன டிடி, அவருது பிறந்தநாள் அன்று இப்படி சொல்லிட்டாரே டிடி!

உலக நாயகன் கமல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தெரிவித்து டிவி தொகுப்பாளினியாக டிடி கமலை மட்டும் பேட்டி எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். டி.டி.ன்னு சொன்னா தெரியாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த அளவிற்கு சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் 20 வருடங்கள் கடந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். நடிகை டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளையும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். சமீபத்தில் ஒரு நேர்காணல் செய்திருக்காங்க. அந்தப் பேட்டியில டிடி சொன்னத பத்தி வாங்க பார்க்கலாம்…. டிவியில வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் எல்லா ஆங்கரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க கிட்ட இருந்து ஒவ்வொரு விஷயத்தை கத்துக்குவேன். அதுமட்டுமில்லாம நான் அவங்க கிட்ட இருந்து நிறைய விஷயத்தை தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பேன்.

என்னுடைய அக்கா பிரியதர்ஷினி ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும்போது ஜேம்ஸ் வசந்தன் சார், உமா பத்மநாபன் மேம், ஷாகுல் ஹமீத் ஆகியோர் எனக்கு ரொம்ப பழக்கமானங்க. அவங்க எல்லாரும் எனக்கு இன்ஸ்பிரேஷன் கூட சொல்லலாம். அவங்ககிட்ட இருந்து தான் நான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அதுமட்டுமில்லாம எனக்கு ஆங்கரிங் செய்யும்போது பல பிரபலங்களுடன் இன்டெர்வியூ பண்ணி இருக்கேன். அதுல சில பிரபலம் கிட்ட இன்னொரு முறையும் பேசினா நல்லா இருக்கும்ன்னு எனக்கு தோணும். அந்த மாதிரி நினைச்சவங்க தான் ஏ.ஆர்.ரகுமான் சார்.

எப்பவுமே ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவருடைய பாடல்களை நான் கேட்பேன். இதையும் பாருங்க : அட அசுரன் அம்மு அபிராமியா இது. 10 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கார் பாருங்க. அதே மாதிரி இன்டர்வியூ பண்ண கூடாதுன்னு நினைச்சதுல ஒரு சில பேர் இருக்காங்க. அதுல நம்ம மிஸ்கின் சார்.ஏன்னா,அவர் பேசறப்ப நல்லா பேசுவாரு. கேள்விகளைக் கேட்கும்போது மூஞ்ச டெரரா வச்சிப்பாரு. எனக்கு தெரியல அவரோட இன்டர்வியூ பண்ணப்போ எனக்கு கம்ப்ஃபர்ட்டபிளா இல்லைன்னு தோணுச்சு. அப்போது நான் நிறைய இன்டர்வியூ பண்ணிட்டு இருக்கேன்.

அதுல என் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் சொன்னா,அது ரஜினி சார், கமல் சார் ரெண்டு பேரையும் சேத்து வச்சு பண்ணது தான். அப்போ நிகழ்ச்சிக்காக அங்கிருந்து எல்லார்கிட்டயும் நான் கேள்வி கேட்டு இருந்தேன். அப்ப ரஜினி சார்கிட்ட கேட்கும்போது அவர் ஸ்டேஜில நான் பேசிடுறேன் ம்மா அப்படின்னு சொன்னாரு. அப்புறம் நான் கமல் சார் கிட்ட என் வாழ்க்கையே ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்ச நிறைய கேள்விகளை கேட்டேன். அவருடைய ஒவ்வொரு பதிலும் என்னை யோசிக்க வைக்கிற அளவுக்கு இருந்துச்சு. இதை பார்த்த ரஜினி சார் பயங்கரமா சிரிச்சாரு. எப்பவுமே கமல் சார் கிட்ட பேசும் போது நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒரு விஷயத்தை சொல்லுவாரு.

மேலும், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இன்னொன்னு சொல்லலாம். அது ஒரு முறை விருது நிகழ்ச்சியில நான் கெஸ்டா தான் போயிருந்தேன். அப்போ திடீர்னு என்னை மேடையேறி தொகுத்து வழங்க சொல்லிட்டாங்க. நான் அப்படி ஒரு ஃப்ளோல பண்ணி முடிச்சுட்டேன். மேலும்,ஒரு நிகழ்ச்சியில சங்கர் சார், ரகுமான் சார், கமல் சார், சூர்யா சார், விஜய் சார், ஷாருக்கான் சார் என நிறைய சினிமா ஜாம்பவான்கள் இருந்தாங்க.

அப்ப அவங்களோட செல்பி எடுக்க எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. சங்கர் சாருக்கு செல்பி எடுப்பது பிடிக்காது. அப்ப ஷாருக்கான் சார் வாங்க எல்லோரும் செல்பி எடுக்கலாம்னு கூப்பிட்டு செல்பீ எடுத்தாரு. என்னால மறக்க முடியாத ரொம்ப சந்தோஷமான தருணம்னா அதை சொல்லுவேன். வெள்ளி திரையில் நடிக்க இன்ட்ரஸ்ட் இல்லையா என கேட்டீங்கன்னா, அப்படியெல்லாம் எதுவுமில்லை. என்னை யாரும் கூப்பிடவில்லை. அதனால நான் நடிக்க போல. அதுமட்டுமில்லாமல் எனக்கு ஆங்கரிங்லா ரொம்ப பிஸியா இருந்துட்டேன். நடிப்பு பக்கம் வர எனக்கு டைம் இல்ல.இப்படி பல விஷயங்களை மனம் திறந்து பேசினார் டிடி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபோலீசில் புகார் அளித்த கோட்டல் நிர்வாகம். கொலை மிரட்டல் விட்ட மீரா மிதுன்!
Next articleநடிகை ஆத்மீகா, கராறாக இருந்த மீசைய முறுக்கு ! இப்போ வெளியிட்டுள்ள போஸை பாருங்க!