கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0

பொதுப்பலன்கள் : ராசிக்கு 8 ல் இந்தப் புத்தாண்டு பிறப்பது குறித்த எந்த அச்சமும் தேவையில்லை. தடைகளைத் தாண்டி முன்னேறும் காலகட்டமாக இந்த ஆண்டு அமையும். பேச்சில் அதிக கவனம் தேவைப்படும் காலகட்டம் இது. மனதில் உள்ளதை எல்லாம் வெளியே சொல்லிவிடாதீர்கள். நல்லவர்கள் போல் கேட்டுக்கொண்டு அதை யாரிடம் சொல்லக்கூடாது அவரிடம் நண்பர்களும் உறவினர்களும் சொல்லிவிடும் ஆபத்து உண்டு. அடுத்தவர்களின் குறைகளைத் தனியாக அழைத்துச் சென்று சுட்டிக் காட்டுங்கள். அதேவேளையில் மனம் திறந்து மற்றவர்களைப் பாராட்டவும் தயங்காதீர்கள்.

இந்த ஆண்டு கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சின்னச் சின்னதாக உடல்நலக் குறைவுகள் வந்து போகும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் அக்கறை அவசியம். பெரிதாக ஆபத்து இல்லை என்பதால் கவலைப்பட வேண்டாம். வீண் விவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. விட்டுக் கொடுத்துப் போவதும் நல்லது. உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்துங்கள்.

கனவுத் தொல்லை, தூக்கம் இன்மை, அடிமனதில் பயம் ஆகியன வந்து நீங்கும். அவ்வப்போது யோகா, தியானம் செய்யுங்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர். அவர்களுக்கு உயர்கல்வி அல்லது உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட திருமணம் நடக்கும்.

மகன் அல்லது மகளின் சுபகாரியப் பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடியும். பெண் பார்த்து விட்டு நீண்ட நாள்களாகப் பதில் தராமல் தயங்கியவர்கள் இப்போது வலிய வந்து பெண் கேட்பார்கள். திருமணம் உடனே முடியும். மகனுக்கு நல்ல மணப் பெண் அமைவாள். சகோதரிகளிடம் நிதானமாகவும், அளவாகவும் பழகுவது நல்லது. உடன் பிறந்தவர்களால் அலைச்சலும், செலவும் வந்து போகும்.

வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ஆனி மாதம் திடீர் பணவரவு, வாகன வசதியும் சொத்துச் சேர்க்கையும், சுப காரியங்களும் நிகழும். புரட்டாசி மாதத்தில் அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.

குருபகவானின் பலன்கள் எவை : 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 6 – ம் வீட்டில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் எதையும் கராராகப் பேசவேண்டாம். கையிருப்புகள் கரையும். அக்கம்பக்கத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். எதிலும் நிதானம் தேவை. அரசு விவகாரங்களில் கவனம் தேவை.

14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 5 – ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத்துணை வழியில் உதவி உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.

ராகு – கேது பகவானின் பலன்கள் எவை : 20.3.2022 வரை ராகு 9 – ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3 -ல் நிற்பதால் சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். 21.3.2022 ம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராகு 8 – ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜித் தொந்தரவுகள் வந்து நீங்கும். சொந்த பந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுப் பேசாதீர்கள். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன் -மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும். நல்லதை எடுத்துச் சொல்லப் போய் சிலநேரங்களில் மனக்கசப்பில் போய் முடியும்.

சனிபகவானின் பலன்கள் எவை : சனி 5 – ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். பிள்ளைகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள்.

வியாபாரம் எப்படி இருக்கும் : முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலம் உண்டு. மற்றவர்கள் நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். புது முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. ஏற்றுமதி – இறக்குமதி, ரியல் எஸ்டேட், இரும்பு, உணவு வகைகளால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களை மதியுங்கள். போட்டிகள் அதிகரிக்கும். வரிபாக்கிகளை உடனுக்குடன் செலுத்துங்கள். தவறான வழிகளைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகம் எப்படி இருக்கும் : உழைப்பு அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். வைகாசி, ஆனி மாதத்தில் புது நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் ஈகோ பிரச்னை வந்து போகும். அலுவலகம் மற்றும் உயர் அதிகாரிகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். கலைஞர்களே வேற்று நாட்டினர், மாநிலத்தால் உங்களுக்கு உதவுவார்.

ஆக மொத்தம் இந்த ஆண்டு சவால்கள், மற்றும் செலவுகள் நிறைந்ததாக இருந்தாலும் வெற்றியையும், பணவரவையும் அதிகப் படுத்துவதாக அமையும்.

பரிகாரம் என்ன: காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் அமர்ந்திருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். நல்லதே நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிலவ சித்திரை புத்தாண்டு 2021 பஞ்சாங்கம் கணிப்பு பிலவ புதுவருட சிறப்புக்கள் மற்றும் வருடம் பிறக்கும் நேரம் கைவிஷேசம் கொடுக்கும் நேரம்!
Next articleதுலாம்‌‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!