கண் கருவளையம், வீங்கின கண்கள், சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள், கண்களுக்கு கீழே இருக்கும் மெல்லிய சுருக்கங்களை போக்கும் அருமையான வழிகள்!!

0

1.சுருக்கங்கள் மற்றும் கோடுகள்:
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களைவிரட்டும்முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்யலாம்.

கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துணியால் சுத்தம் செய்யலாம்.தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.

2.கருவளையம்:
சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகவும் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உட்கொள்ளதது, கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரி செய்யலாம்.எட்டு மணி நேரத் தூக்கம் முதல் சிகிச்சை. பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியப்படி அடிக்கடி செய்யலாம்.

கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் போல அமையும்.கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.

3.வீங்கின கண்கள்:
சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கியது போல மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களை மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

4.சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள்:
கண்களுக்கான மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண்களின்மேல் வைக்கிற பழக்கம் வேண்டாம். எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களைக் கழுவிவிட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

5.கண்களுக்கான மேக்கப்பை நீக்க வேண்டியதன் அவசியம்:
இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்ற வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவக்க நேரிடும்.

6.சில டிப்ஸ்: சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களைக் கழுவ வேண்டும்.சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம்.கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.எட்டு மணி நேரத் தூக்கம். 10 முதல் 15 டம்ளர் தண்ணீர் குடிப்பது இந்த இரண்டும் மிக முக்கியம்.

சூரிய ஒளியின் தாக்கத்தாலும், வயது முதிர்வினாலும் கண்களுக்கு கீழ் உண்டாகும் சுருக்கங்கள் நம்மை கவலை கொள்ளச் செய்யும் ஒரு விஷயம் தான். கண்களுக்கு கீழே உள்ள பகுதியில் குறைந்த அளவு கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் மிகவும் மெலிதாக இருக்கும். இதுவே எளிதில் சுருக்கங்கள் தோன்ற காரணமாயிருக்கிறது. இந்த சுருக்கத்தை இரசாயன பொருட்கள் கொண்டு போக்க முயற்சிப்பது சிறந்த தீர்வு இல்லை. ஆதலால் இதற்கான தீர்வுகள் இயற்கையான முறையில் இருப்பது கண்களுக்கு நன்மையை செய்யும். இயற்கையான தீர்வுகள் மூலம் கண் சுருக்கங்களை போக்குவது பற்றி இப்போது காண்போம்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய்யை சுருக்கங்களில் தடவுவதால் ஈர்ப்பத்தை அதிகரிக்கும் . தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், சருமத்தை புதுப்பித்து நீர்ச்சத்தை அதிகரிக்கும். ஆகையால் தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்வது நல்ல பலனை கொடுக்கும். இரவில் இதனை செய்து காலையில் குளிக்கும்போது முகத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மெல்ல மறையும்.. முகமும் ஈரப்பதத்தோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் மாஸ்க்: 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை சுருக்கங்களில் தடவவும்.

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து பாதாம் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தி சுருக்கங்களை நீக்கலாம்.

ஆலிவ் எண்ணெய் : கருவளையம் மற்றும் கண் சுருக்கத்திற்கு ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் கே வயது முதிர்வை தடுக்கும். கண்ணுக்கு கீழே உள்ள பகுதி விரைவில் ஈரப்பதத்தை இழக்கும் தன்மை உள்ளவை. ஆலிவ் எண்ணெய்யை அந்த இடத்தில் அடிக்கடி தடவுவதால் முகம் ஈரப்பதத்தோடு இருக்கும். உங்கள் முகம் இளமையுடன் இருக்க ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து மசாஜ் செய்யலாம்.

ஆலிவ் எண்ணெய் மசாஜ்: ஆலிவ் எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவவும்.

10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும்.

5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

இதனை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

யோகர்ட்: யோகார்டில் லாக்டிக் அமிலம் மற்றும் அல்பா ஹைட்ராக்சி அமிலம் உள்ளது. இந்த அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, கோடுகளை வர விடாமல் செய்கிறது . இதனால் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது. யோகர்ட் கொண்டு செய்யும் இந்த மாஸ்க்கை பயன்படுத்தி சுருக்கங்களை போக்கலாம்.

யோகர்ட் பேஸ் பேக் : 1 ஸ்பூன் யோகர்டுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை முகத்தில் தடவவும்.

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

திராட்சை: எந்த வகை திராட்சையாக இருந்தாலும் இவற்றிற்கு ஊட்டச்சத்துகளில் எந்த குறைவும் இல்லை. ரீசேர்வட்டால் என்ற ஒரு ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் உள்ளது. இது சுருக்கங்கள் வருவதை தாமத படுத்துகிறது.

திராட்சை மாஸ்க்: 5-7 திராட்சைகளை எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

இதனுடன் தேன் அல்லது யோகர்ட் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும்.

15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

அவகேடோ: சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்களான வைட்டமின் ஏ மற்றும் ஈ அவகேடோவில் உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை தந்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.

அவகேடோ மாஸ்க் : 1 அவகேடோவை எடுத்து நன்றாக விழுதாக்கி கொள்ளவும்.

அந்த விழுதை முகத்தில் தடவவும்.

20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

குளிர்ந்த நீர் : குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுவதால் வயது முதிர்வு தாமத படுகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஓரளவுக்கு குளிர்ச்சியாக நீர் இருத்தல் அவசியம். அதிகமான குளிர்ச்சியுடைய நீர், சரும செல்களை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீர் பருகுவதால் உடல் நீர்ச்சத்தோடு இருக்கும்.

மேலே கூறிய முறைகளை தொடர்ந்து பின்பற்றி வரும்போது விரைவில் கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கங்கள் மறையும் . நீங்களும் இளமையாக தோன்றுவீர்கள் !

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்களை பாதுகாக்க தினமும் இரவில் இதை மட்டுமாவது செய்வீர்களா? க‌ண்கள் பாதுகா‌ப்பு சில டிப்ஸ் !
Next articleவிந்து விருத்தி, திருப்தி இல்லையென்றால், நேரத்தை அதிகபடுத்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இலகுவாக செய்யக்கூடிய‌ சில டிப்ஸ் !