கண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா?

0

தூங்கி எழுந்த பிறகு, இரு கண்களின் ஓரங்களிலும் தோலுடன் ஒட்டிக் கொண்டு கெட்டியான திரவம் போல ஒன்று உருவாகி இருக்கும். அதை நாம் பீழை என அழைக்கிறோம். இது அனைவருக்கும் தினமும் கண்களின் ஓரத்தில் உருவாவது இல்லை. சிலருக்கு அதிகமாக உருவாகும். இது ஏன் உருவாகிறது? இது உருவாவதை வைத்து நமது உடல் நலத்தை பற்றி எப்படி அறிந்துக் கொள்வது என்பது குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்…

எப்படி உருவாகிறது? ஏன் இந்த கெட்டியான திரவம் கண்களின் ஓரத்தில் உருவாகிறது? நாம் அழுவதால் கண்கள் உண்மையில் சுத்தமாகிறது. அதே போல நாம் உறங்கும் போது அழும் வாய்ப்புகள் குறைவு… ஆனால், கண்ணீர் உருவாக்கும் அந்த கெட்டியான திரவம் அப்படியே தேங்கி சிறியளவிலான வறண்ட பந்து போல உருவாகி நிற்கும். powered by Rubicon Project சில சமயங்களில் இது சாதரணமாக தான் இருக்கும். ஆனால், சில சமயங்களில் நமது ஆரோக்கியம் அபாயமாக மாறுவதன் முதல் அறிகுறியாகவும் இது தென்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பீழை கூறும் அறிகுறிகள்! சளி, காய்ச்சல், கண் எரிச்சல் இருக்கும் போது கண்களில் இருந்து பீழை வெளிவரலாம். சில சமயங்களில் அதிகமாக வெளிவரும் பீழை காரணமாக கண் பார்வை கோளாறுகள், கண்களில் இரத்தம் வெளிப்படுதல், கண் பார்வை இழப்பு, மற்றும் கருவிழி பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

கண் இன்பெக்ஷன்! உங்களுக்கு தூங்கி எழுந்தவுடன் கண் இமைகள் ஒட்டியது போன்ற உணர்வு, எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளவும். சில சமயங்களில் கண்களை பேபி ஷாம்பூ பயன்படுத்தி கழுவினால் கூட பலனளிக்கும் என கூறுகிறார்கள். ஆயினும், மருத்துவர் பரிந்துரைப்படி மருத்துவம் மேற்கொள்வதே சிறப்பு!

அலர்ஜி! சில சமயங்களில் கண்கள் எதற்காவது அலர்ஜியாக இருந்தால் கண்கள் சிவந்து, பீழை போன்ற திரவம் வெளிவரும் வாய்ப்புகளும் உண்டு. சிலருக்கு புகை என்றால் அலர்ஜியாக இருக்கும், சிலருக்கு தூசு என்றால் அலர்ஜியாக இருக்கும்.

வறட்சி! கண்களின் ஈரப்பதம் குறைந்து வறட்சி அடைந்தால் அதிகப்படியான கண்ணீர் வரும். இது உங்கள் மழுப்பல் சுரப்பியில் (கண்ணீர் சுரப்பி – lacrimal gland) தாக்கம் ஏற்பட்டிருந்தால் இப்படி நடக்கலாம்

காண்டாக்ட் லென்ஸ்! நீங்கள் பயன்படுத்தும் காண்டாக்ட் லென்ஸ் பழையதாகிவிட்டாலோ, தூசு படிந்துவிட்டாலோ கண் எரிச்சல் மற்றும் பாக்டீரியா, வைரஸ் தாக்கம் உண்டாகி கண்களில் இருந்து திரவம் அதிகம் வெளிவரலாம். எனவே, காண்டாக்ட் லென்ஸை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

சுரப்பி பெரிதாதல்! கண்ணீர் தினமும் உருவாகும் ஒன்று. மேல் கண் இமை அல்லது கீழ் கண் இமை என கூறப்படும் புன்க்டா புள்ளிகள் (Puncta) திறந்திருந்தால் கண்ணீர் அதிகமாக உருவாகலாம். சிலசமயங்களில் இதற்கு மருத்துவ முறைகளால் மட்டுமே தீர்வு காண முடியும். சிறுவர்கள் வளரும் போது சில சமயம் இப்படி நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பிங்க் கண்கள்! உங்கள் கண்கள் ஓரிரு தினம் பிங்க் நிறத்திலேயே இருக்கிறது எனில் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். அல்லது உங்கள் கண்கள் லைட் சென்சிடிவ்வாக இருந்திருக்க வேண்டும், நீங்கள் அதிக நேரம் அதிகப்படியான லைட் வெளிச்சத்தில் நேரம் செல்வழித்திருந்தால் இப்படி ஆக வாய்ப்புகள் உண்டு. இதை பாக்டீரியல் கான்செர்டிவிட்டிஸ் (Bacterial Conjunctivitis) கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் ஒரு டம்ளர் பாலில் இந்த 10 வற்றல்களை ஊற வைத்து சாப்பிட்டால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா?
Next articleஉங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!