கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் உயிரை மாய்த்துக்கொண்ட மணமகன்! செய்வதறியாது கலங்கி நிற்கும் புதுப்பெண்!

0
396

மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணமான அடுத்தநாளே மணமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜீவன் போசலே என்ற 28 வயது நபருக்கு நேற்று முன்தினம் திருமண்ம நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த அடுத்தநாள் வீட்டில் யாரிடம் சொல்லாமல் பைக்கில் வெளியே சென்றுள்ளார்.

வெளியில் சென்ற ஜீவன் வெகுநேரமாகியும் வீடு திருப்பாத காரணத்தால் பெற்றோர் பதற்றம் அடைந்து தேடிப்பார்த்துள்ளனர். அப்போதுதான் மோட்டார் சைக்கிள் முகுந்த்வாடி ரயில் நிலையம் அருகே கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, ஜீவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ஆனால், திருமணமான 2வது நாளில் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவராத காரணத்தால் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவரின் இந்த சோக முடிவு குறித்து என்ன செய்வதென்று தெரியாமல் மனைவி கலங்கி நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதூங்குவது போல நடித்து கணவர் செய்யும் செயல்! மனைவி நெடியில் எடுத்த முடிவு! இறுதி வரை பார்க்கவும்
Next articleஇறங்கி குத்தாட்டம் போடும் தமிழ் பெண்கள்! பல இலட்சம் பேரை ரசித்து ஆட வைத்த காட்சி!