கடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்!

0
1935

பெண்கள் காலா காலமாக முகத்தை அழகு படுத்த பயன்படுவது கடலை மா, இதை கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

நாம் சவர்க்காரத்தைக் கொண்டு முகத்தைக் கழுவினால், முகத்திலுள்ள எண்ணெய் வெளியேறி விடுவதுடன் முகப்பருக்கள் என பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றோம்.

வெயிலால் உண்டாகும் கருமையான சருமத்தை போக்க‌ கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

கண்களைச் சுற்றி கருவளையங்கள் உள்ளவா்கள் கடலை மாவை தினமும் பூசுவதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.

கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.

முகப்பரு உள்ளவா்கள் , கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள எண்ணெய் நீக்கப்பட்டு, பரு வருவது தடுக்கப்படும்.

முகத்தில் எண்ணெய் அதிகமாக உள்ளவா்கள் கடலை மாவினால் முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகமாக வழிவது தடுக்கப்படும்.

இரசாயனம் கலந்த சவர்க்காரத்தை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தினால் சருமம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் காணப்படும்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

By:Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: