ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 அன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவில் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய பிரிவு மற்றும் மகப்பேற்று வைத்திய பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
அந்த நான்கு மழலைகளுக்கும் வைத்தியசாலை சமூகம் சார்பாக வாழ்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: