எலும்புகள் வலிமையுடன் தேய்மானமின்றி இருக்க இரவு ஆகாரத்திற்குப் பின் இதில கொஞ்சம் சாப்பிடுங்க !

0

அறிகுறிகள் :
எலும்பு தசை வலி.

தேவையானவை:
அவுரி வேர்,
அவுரி வேர்ப்ப‌ட்டை,
பெருங்காய‌ம்,
மிள‌கு.

செய்முறை :
அவுரி வேர், அவுரி வேர்ப்ப‌ட்டை, பொரித்த‌ பெருங்காய‌ம், மிள‌கு ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய‌ள‌வு மாத்திரை செய்து உலர்த்தி சாப்பிட்டு வந்தால் எலும்பு தசை வலி குறையும்.

அறிகுறிகள்:
எலும்பு வலுவிழந்து தேய்மானம் ஏற்படுதல்.

தேவையானவை:
மாதுளம் பழம்.

செய்முறை:
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதி அடையும்.

அறிகுறிகள்: எலும்புகள் வலுவின்மை.

தேவையானவை: செளசெள, சேப்பங்கிழங்கு.

செய்முறை: சேப்பங்கிழங்கு, செளசெள ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலிமை பெறும். அதிகாலை சூரிய ஒளி கை,கால்களில் படுமாறு நின்றால் அதிலுள்ள புறஊதா கதிர்களால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும்.

அறிகுறிகள்: வலிமையற்ற எலும்புகள்.

தேவையானவை: உலர்ந்த திராட்சை.

செய்முறை: சிறிதளவு உலர்ந்த திராட்சையை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வர எலும்புகள் வலிமையாகும்.

நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.

உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர்.

மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.

அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன.உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎலும்புகள் வலுவிழந்து காணப்படுதல் வலிமையற்ற எலும்புகள் போன்றவற்றை சரி செய்வதற்கு சிறந்த தீர்வு !
Next articleஎலும்புகளில் அடிபட்டு புண்கள் ஏற்பட்டால் எலும்பைக் காக்க எளிய வழிகள்!