அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.
உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும்.
அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதுனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும்.
பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள், கால்சியம் சத்துக்களை அழிக்கும் தன்மை உள்ளவை. எனவே காபி, டீ போன்ற பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால், நம் உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கு காரணமாக உள்ளது.
கால்சியம் நிறைந்த உணவுகள்
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.
அவர்கள் கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.
அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறி வேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.
எள், கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி அல்லது கூழாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உவு மருந்து பிரண்டை என்னும் கொடி, பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது.
சிறந்த வலி நிவாரணியாகவும், வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.