எரிபொருள் நெருக்கடி குறைந்தது! கியூ.ஆர். முறைமையில் வெற்றி!

0

எரிபொருள் நெருக்கடி குறைந்தது! கியூ.ஆர். முறைமையில் வெற்றி!

வடக்கில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன.

கியூ. ஆர் குறியீட்டு அட்டை முறையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. வடக்கு மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வாரம் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரத்தின் ஆரம்ப நாள்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையின் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் குறைந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை அரச பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மாத்திரம் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகிக்க திட்டமிடப்பட்டபோதும் , வெகுவிரைவாகவே அவர்களுக்கான எரிபொருள் வழங்கும் பணி நிறைவுற்றதால், பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மதியத்தின் பின்னர் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

கியூ.ஆர் குறியீட்டு அட்டை நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலேயே, இவ்வாறு எரிபொருள் நெருக்கடி குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇறக்குமதி தடை நீக்கம்: ஜனாதிபதி கையொப்பம்!
Next articleநள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைப்பு! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!