உயிரை பறிக்கும் பணக்கார பிஸ்கட்டுகள்! இனிய யாரும் நம்பி சாப்பிட வேண்டாம்!

0

ஏழைக் குடும்பங்கள், நடுத்தரக் குடும்பம், பணக்கார வீடுகள் என எல்லா வகையான வீடுகளிலும் ஸ்நாக்குக்காக நிச்சயம் பிஸ்கட்டுகள் வாங்கி வைத்திருப்போம்.

என்ன அது அவரவர் பொருளாதாரத்தைப் பொறுத்து ருசி, விலை, பிளேவர் என வேறுபாடு இருக்கும். அவ்வளவு தான்.

பிள்ளைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் கொடுப்பதற்கு, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் என நம்முடைய முதல் ஸ்நாக்ஸ் சாய்ஸ் எதுவென்றால் அது பிஸ்கட்டாகத் தான் இருக்கும். அது ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்ற பிம்பம் நம்மிடையே இருப்பது தான் இதற்குக் காரணம்.

அதனாலேயே பெரியவர்கள் கூட, தங்களுடைய தொலைதூரப் பயணங்களின் உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். அது எவ்வளவு பிரச்சினைகளை உண்டாக்கும் என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

விளம்பரங்கள்

மற்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவது எப்படி உடலுக்குக் கெடுதல் என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறதோ அதில் சிறிதளவு கூட பிஸ்கட் பற்றி வெளியாவதில்லை.

பொதுவாகவே குழந்தைகள் பால் குடிக்கவும் சாப்பிடவும் அடம்பிடிக்கும். இதில் 4 பிஸ்கட் சாப்பிட்டால் ஒரு கிளாஸ் பால் குடிப்தற்குச் சமம் என்று விளம்பரம் வந்தால் பெற்றோர்களும் எளிமையாக குழந்தைகளை சாப்பிட வைப்பது பற்றித் தானே யோசிப்பார்கள். இனியாவது இதுபற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

இப்படி நம்முடைய வாழ்க்கையில் நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பொருளாக இருக்கும் இந்த பிஸ்கட் உண்மையிலேயே நம்முடைய உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறதா?

உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா? என்று ஊட்டச்சத்து நிபுணர்களிடம் நாம் கேட்டால் நிச்சயமாகக் கூடாது என்கிறார்கள். ஆபீஸ் மீட்டிங் முதல் இது முக்கிய உணவுப் பொருளாக மாறிவிட்டது.

சிலர் காலை உணவுக்கு காபி (அ) பால், பிஸ்கட்டையே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தான உணவு என்பதும் இந்த பிஸ்கட்டுகள் மிருதுவாக வருவதற்கு இதில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிரான்ஸ் ஃபேட் (trans fat)

பிஸ்கட்டில் வெறும் மாவுப்பொருள் தான் இருக்கிறது. கொழுப்புச்சத்து இல்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? பிஸ்கட் நல்ல சுவையும் வடிவமும் பெறுவதற்கான சர்க்கரை, சுக்ரோஸ், குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட், கலர்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

பிஸ்கட்டின் காலாவதி நாட்களை அதிகப்படுத்துவதற்காக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பு சேர்க்கப்படுகிறது. இது காலப்போக்கில் நம்மடைய உடலில் டிரான்ஸ் ஃபேட் (trans fat) என்னும் கெட்ட கொழுப்பாக மாறி பல பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

புரதத்தை எப்படி கண்டுபிடிப்பது?

பொதுவாகவே புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருள்கள் மற்ற உணவுகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதல் மிருதுவாக இருக்கும். அப்படி மிருதுவாக இருந்தால் அதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது என்றும் அதேசமயம் மிருதுத்தன்மை குறைவாக இருந்தால் அதில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது என்றும் அர்த்தம்.

உண்டாகும் நோய்கள்

சுக்ரோஸ் அதிகம் கொண்ட சக்கரை தான் பிஸ்கட்டில் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. இது நம்முடைய உடலில் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து விடுகிறது. அதோடு இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் ஆகியவை உண்டாவதற்குப் பெரும்பாலும் இந்த பிஸ்கட்டுகள் தான் காரணமாக அமைகின்றன.

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

பிஸ்கட் செய்யும் மிக முக்கியமான வேலையே பசியை அடக்கி வைத்திருப்பது தான். குறைந்தபட்சம் மூனறு அல்லது நான்கு பிஸ்கட் சாப்பிட்டாலே குழந்தைக்கு பசி அடங்கிவிடும். அதற்குப் பிறகு குழந்தையால் வேறு எதுவும் சாப்பிடமுடியாது. அதனால் குழந்தைக்கு பிஸ்கட் கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமிகவும் சக்தி வாய்ந்த சில இந்திய பெண்மணிகள் இவர்கள்தான்! ஏன் தெரியுமா!
Next articleசாப்பிட்டால் விஷமாக மாறும் 6 உணவுகள்! இதை எல்லாம் நியூட்ரிஷியன்கள் சாப்பிடவே மாட்டாங்களாம்! அதிர்ச்சியில் ஆராச்சியாளர்கள்!