உணவுகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி உண்ணும் பழக்கம் உள்ளவரா நீங்கள். போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்! இந்த 8 உணவுகளையும் அவ்வாறு செய்யாதீர்கள் !

0

உணவுகளை மீண்டும் மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றி உண்ணும் பழக்கம் உள்ளவரா நீங்கள். போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்

மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றி சாப்பிட கூடாத 8 உணவுகள்.

சிக்கன்

கோழி இறைச்சி அதிகளவு மிகையான புரோட்டீன் சத்தினைக் கொண்டுள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு சமிபாடடைய, அதிகளவான நேரம் ஆகின்றன. சிக்கனைச் மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றி உண்ணும் போது, இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கின்ற வகையில், அதனை இரண்டாவது முறை சூடேற்றி உண்ணும் போது, அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடுகின்றது. எனவே, இதனை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட விரும்பினால் அதனை சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடுவதே மிகச் சிறந்த வழியாகும்.

கீரை

அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ள உணவாகிய கீரையினை மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றும் போது, அதிலுள்ள நைட்ரேட்ஸ் (Nitrates) நைட்ரைட்டாக (Nitrites) திரிபடைந்து, புற்றுநோயை உண்டாக்கும் பண்பினை (Carcinogenic Properties) உடையது. கீரை உணவுகளை மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றி உண்ணும் போது, சமிபாடு தொடர்பான பிரச்னைகள் உருவாகுவதுடன், குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே, கீரையைச் மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றி உண்ணுவதனைத் தவிர்த்தல் நல்லது.

முட்டை

அதிகளவான புரோட்டீன் நிறைந்த உணவாக முட்டை காணப்படுகின்றது. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்றி உண்ணும் போது, அது விஷமாக மாறுவதுடன், சமிபாட்டுப் பிரச்சினை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் அடுப்பில் வைத்து சூடேற்றி; உண்ணக் கூடாது.

காளான்

பொதுவாக காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே மிகச்சிறந்தது. ஏனெனில், காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. எனவே இதனை, இரண்டாம் முறை அடுப்பில் வைத்து சூடேற்றி உண்ணும் போது அது விஷமாக மாறி, சமிபாட்டுக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகளை உருவாக்கும்.

சோறு

நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருளான அரிசி சோறு அல்லது சாதத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, அது ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இதன் போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் அந்த உணவு நச்சுத் தன்மை உள்ளதாக மாறி வாந்தி, குமட்டல் மற்றும் உடல்நல பாதிப்புகள் போன்றனவற்றை ஏற்படுத்தும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் அடுப்பில் வைத்து மீண்டும் சூடேற்றி பயன்படுத்தும் போது எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவதுடன், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்றன ஏற்படவும் காரணமாக அமைகின்றன.

பீட்ரூட்

பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை கொண்டுள்ளதனால், பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தும் போது அது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

நாம் படித்து தெரிந்து கொண்டதை பிறருடன் பகிர்ந்து கொள்தல் நலம், அதை நாமும் கடைப்பிடித்தால் மிக்க நலம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகால் நகத்தில் சொத்தையா? நகம் உடைந்து வலி மற்றும் துர்நாற்றம் வீசுதல் பூஞ்சைத் தொற்று போன்றவற்றை விரைவில் குணப்படுத்த சிறந்த இயற்கை வழிகள்!
Next articleஇன்றைய ராசிபலன் 23-09-2017