உட்சூடு, வாதம், கபம் போன்ற நோய்களை குணமாக்கும் விஷ்ணு கிராந்தி !

0

உட்சூடு, வாதம், கபம் போன்ற நோய்களை குணமாக்கும் விஷ்ணு கிராந்தி !

தரையோடு படர்ந்து வளரும் சிறிய செடி வகை சிறு இலைகளைக் கொண்டது. வட்டமான நீல நிறமான சிறு மலர்களை உடையது. அரிதாக வெண்ணிற – செந்நிற மலர்களும் காணப்படுவதுண்டு. தமிழகமெங்கும் தானே வளர்கிறது முழு செடியும் மருத்துவப்பயன் உடையது.

இதன் சமூலம்(வேர், இலை, தண்டு, பூ அனைத்தும்) அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு தயிரில் கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும். காரம் புளி நீக்க வேண்டும்.

விஷ்ணு கிராந்தி ஓரிதழ்த்தாமரை – கீழாநெல்லி சம அளவு அரைத்து பாக்கு அளவு சாப்பாட்டிற்கு பிறகு காலை – இரவு இரண்டு வேலையும் சாப்பிட்டு பால் குடித்துவர நரம்புத் தளர்ச்சி, வெட்டை சூடு, மறதி போன்ற நோய்கள் குணமாகும். உடல் பலம் உண்டாகும்.

சமூலத்தை நெல்லிக் காய் அளவு 90 நாட்கள் சாப்பிட்டு வர கண்டமாலை(கழுத்தை சுற்றி வீக்கம்) நோய் குணமாகும்.

5 கிராம் அளவு இதன் சமூலத்தை பால் விட்டு அரைத்து பாலில் கலக்கி வடிகட்டி காலை – மதியம்- மலை 3 வேளை சாப்பிட்டு வர சீத பேதி – காய்ச்சல் – மேக நோய் எலும்புக்குக்கி – இளைப்பு – இருமல் – வாதம் – பித்தம் தொடர்பான நோய்கள் குணமாகும். கண்களுக்கு பிரகாசம் உண்டாகும்.

விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும்.

இதன் சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும்.
இதன் இலையுடன் கண்டங்கத்தரி, பற்பாடகம், தூதுவேளை இலை சம அளவாக எடுத்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி 10 மில்லி அளவு சாப்பிட்டு வர டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.

விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும்.

இதை இலையுடன் துளசி, ஆடாதோடை, தும்பை, வெள்ளறுகு, சம அளவு சேர்த்து புட்டு போல் அவித்து எடுத்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு காலை மாலை இரு வேளை சாப்பிட நீண்ட நாள் காய்ச்சல் விஷக் காய்ச்சல் குணமாகும்.

விஷ்ணு கிராந்தி ஆவாரை வேர்ப்பட்டை ஆகிய இரண்டும் சம அளவு கலந்து அரைத்து எலுமிச்சை பழ அளவு பாலில் கலந்து சாப்பிட சிறு நீரில் இரதம் கலந்து போகுதல் குணமாகும்.
இதன் இலையுடன் ஓரிதழ்தாமரை சேர்த்து பால் விட்டு அரைத்து – மாதவிடாய் கண்ட பெண்கள் மூன்று நாட்கள் சாப்பிட மலடு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.

விஷ்ணு கிராந்தி சமூலம் நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 5 கிராம் அளவு பாலில் தினசரி காலை மாலை சாப்பிட வாத நோய் தீரும்.

இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சுரங்களை விரட்டுவதில் முதன்மையானது, விஷ்ணுகிராந்தி என்ற மூலிகை நடைபாதை, வயல், வரப்பு உள்பட ஈரப்பதமுள்ள இடங்களில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் சின்னஞ்சிறிய செடியான விஷ்ணு கிராந்திக்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் மலையளவு! விஸ்ணுகிராந்தியில் வெள்ளைப்பூ மற்றும் ஊதப்பூ என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் இரண்என் மருத்துவக் குணங்களும் ஒன்றுதான்.

“திறந்திட்ட விஷ்ணு சுரந்த தனைக்கொணர்ந்து

செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு

மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்

மாசற்ற எலும்புக்குள் சுரம்தான் போகும்

கறந்திட்ட தேகமது கருத்து மின்னும்

கண்ணொளிதான் யோசனை தூரந்தான் காணும்

பிறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகி ஏறும்

ஏற்றாமாம் சுழிமுனையும் திறந்து போமே. . . . .

என்கிறார், சித்தர் போகர்.

விஷ்ணுகிராந்தியை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும். அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசம் சீராக்கும் என்பது தான் இந்தப் பாடலின் சுருக்கமான பொருள்.

காய்ச்சல் காணாமல் போகும்!

அந்தக்காலத்தில் கொடும் காய்ச்சலைக் குணப்படுத்த விஷ்ணுகிராந்தி அதிகம் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். சித்த மருத்துவ நூல்கள் . மனிதனை தாக்கும் காய்ச்சல் 64 வகையானவை எனக் குறிப்பிடும் சித்தர்கள் வாதம் பித்தம், கபம் (சளி) என்ற மூன்று நாடிகள்தான் காய்ச்சலுக்கு அடிபடையானவை என்கிறார்கள். குறிப்பாக, விஷக்காய்ச்சலுக்கு விஷ்ணுகிராந்தி இலையைப் பயன்பத்தி இருக்கிறார்கள். விஷ்ணுகிராந்தி, நிலவேம்பு, பற்பாடகம், சீந்தில் கொடி ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மிளகு கிராம்புத்தூள் கலந்து வயிறு காலியாக இருக்கும் போது மூன்று வேளை குடித்தால், 5 நாட்களில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம். பக்கவிளைவு எதுவும் கிடையாது என்கிறது, சித்தமருத்துவம்.

விஷக்காய்ச்சல் விரட்டும் விஷ்ணுகிராந்தி கஷயாம்!

கபவாதசுரம் என்ற வகையைச் சேர்ந்த டெய்கு காய்ச்சலுக்கு, ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. அதே நேரம் டெங்கு முழுமையாக தாக்கும் போது விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கின்றன.

இந்தப்பொடியை ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இதை ஒரு லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அல்லது சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். தினமும் மூன்று வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி ஓடும் என்கிறார்கள், தென்னிந்திய சித்தமருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா கற்றாழையை இப்படியெல்லாம் ஜூஸ் போட்டு குடித்துப்பாருங்கள்!
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 07.11.2019 வியாழக்கிழமை !