உடல் எடையை விரைவாக குறைக்க இந்த ஒரு உணவு போதும்! தினமும் சாப்பிடுங்க!

0
1316

உடல் எடை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் தானியம் கொள்ளு. இது குறைந்த கலோரி தானியமாகும். குறைந்த கலோரி உணவாக இருந்தாலும் இதில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக இருப்பதால், எடை குறைந்தாலும், சோா்வு ஏற்படாது.

தினமும் நீங்கள் கொள்ளினை ஊறவைத்து, காலை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் எடை விரைவில் குறையும், மேலும் உடற்பயிற்சி செய்யாவிடினும், கொள்ளு மட்டும் சாப்பிடுவதால் எடை குறைகின்றது.

கொள்ளில் கல்சியம், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் ஹீமோக்ளோபின் கட்டமைப்பிற்கு உதவுகிறது.

மேலும் பாலிபொன் மற்றும் ப்லவனைடு போன்ற அன்டி ஆக்சிடேன்ட்களும் இதில் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் இளமையையும் தருகிறது.

கொள்ளினை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். ஊளைச்சதையும் குறையும்.

எடை குறைந்தாலும் கொழுப்பினுடைய அளவை கட்டுப்படுத்துவதில் இந்த தானியத்தில் உள்ள டையூரிடிக் பண்புகள் உதவுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: