குடல் புண்கள் உள்ளவர்கள் மற்றும் உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் வள்ளிக்கிழங்கை இப்படி செய்து சாப்பிடுங்க!

0

மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதும், புண்களை ஆற்றவல்லதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுமான வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணத்தை பற்றி பார்க்கலாம்.

பல்வேறு நன்மைகளை கொண்ட வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். இதில், வைட்டமின் சி, மாவுச்சத்து உள்ளது. வேகவைத்த வள்ளிக்கிழங்கு இனிப்பு சுவையை தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. மூட்டுவலியை போக்கும் தன்மை கொண்டது.

வள்ளிக்கிழங்கு இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரித்தல்
வள்ளிக்கிழங்கு இலைகளை நீர்விட்டு அலசி எடுக்கவும். இதை பூச்சிக்கடி, வண்டுக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டிவைத்தால் வலி குணமாகும். புண்களை ஆற்றும் மருந்தாக வள்ளிக்கிழங்கு விளங்குகிறது.

வள்ளிக்கிழங்கின் இலைகளை நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி இளஞ்சூட்டுடன் பருகுவதன் மூலம் புண்கள் விரைவில் ஆறும். வள்ளிக்கிழங்கு இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது.

வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் மருந்து தயாரித்தல்
தேவையான பொருட்கள்: வள்ளிக்கிழங்கு, உப்பு, சீரகப்பொடி, தயிர்.

செய்முறை: வேகவைத்த வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு மசித்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சிறிது சீரகப்பொடி, தயிர் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டுவர குடலில் ஏற்பட்ட புண் ஆறும். ரத்த கசிவு நிற்கும். வள்ளிக்கிழங்கு அற்புதமான உணவாக விளங்குகிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நச்சுக்களை வெளித்தள்ள கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது.

வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரித்தல்
தேவையான பொருட்கள் : வள்ளிக்கிழங்கு, நெய், தேங்காய் துருவல், சுக்குப்பொடி, வெல்லம்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றவும். இதனுடன் வேகவைத்த மசித்த வள்ளிக்கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.

வள்ளிக்கிழங்கில் உள்ள புரதம், மாவு, இனிப்பு சத்து ஆகியவை குளிர்ச்சி தந்து உடலுக்கு பலம் தரக்கூடியதாக விளங்குகிறது. வள்ளிக்கிழங்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்ய கூடியதாகிறது. சிறுநீரை சீராக வெளித்தள்ளும். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றுக்களை விலக்கும். குடலின் அடிப்பகுதியில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. வள்ளிக்கிழங்கை குழந்தைகளுக்கு தின்பண்டம் போன்று செய்து கொடுப்பது நல்லது. பாதுகாப்பான வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலம் பெறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் 21.09.2018 – புரட்டாசி 05, வெள்ளிக்கிழமை !
Next articleசிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்ய கோரை கிழங்கு மருந்து தயாரிப்பது எப்படி.