அந்தரங்க பகுதியில் உண்டாகும் அரிப்புக்களை நீக்க சில எளிய வழிகள்!

0
4104

அந்தரங்க பகுதியில் உண்டாகும் அரிப்புக்களை நீக்க சில எளிய வழிகள்!

வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், வாயுத்தொல்லை, அந்தரங்க இடத்தில் அதிகமாக அரிப்பது போன்ற ஒருசில உடல்நல பிரச்சனைகள் பொது இடத்தில் நால்வர் மத்தியில் பழகும் போது அசௌகரியத்தை உண்டாகும்.

இதில், அந்தரங்க பகுதியில் அதிகரிக்கும் அரிப்பு உங்கள் இல்வாழ்க்கையையும் கூட சில சமயங்களில் பாதிக்க செய்யலாம். இதனை பதிலாக இயற்கையாக எலுமிச்சை கொண்டு எப்படி சரி செய்வது என பார்ப்போம்.

எலுமிச்சை பச்சையாக இருந்தாலும் சரி, மஞ்சளாக இருந்தாலும் சரி பொதுவாகவே எலுமிச்சை என்றாலே பாதுகாப்பு அளிக்கும் ஊட்டச்சத்து மிக்க வைட்டமின் சி சத்துக் நிறைந்த ஒன்றாகும்.

பாதி பழுத்த அல்லது பழுத்த எலுமிச்சை இரண்டுமே நோய்த் தாக்கத்தை குறைக்கவும், மேலும் பரவாமல் இருக்கவும் பயனளித்து உதவும் தன்மை கொண்டுள்ளன. எனவே இதனை அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசுவதன் மூலம் அரிப்பை குறைக்க முடியும்.

(குறிப்பு: இயற்கை முறைகளாக இருப்பினும் உங்களுக்கு எப்பட்டிற்கும் அலர்ஜி ஒவ்வாமை ஃ அரிப்பு எவ்வகையானது என சரும நல மருத்துவரிடம் பரிசோதனை செய்த பின்னரே பயன்படுத்துவது நல்லது.)

மஞ்சள் பேஸ்ட், லாவெண்டர் எண்ணெய், கற்றாழை, தேங்காய் எண்ணெய், வேப்பிலை, பூண்டு மற்றும் ஆலிவ் பேஸ்ட்

கார்ப்ஸ் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பாக்டீரியாக்கள் எளிதாக பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுவதனால்;, உடலில் கிருமித் தொற்று உள்ளவர்கள் சர்க்கரையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கிருமித் தொற்று உள்ளவர்கள் சோடா பானங்கள், பாஸ்தா, கேக், இனிப்புகள், பாஸ்ட்பூட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றனவற்றைத் தவிர்த்தல் நல்லது.

உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

கிருமித் தொற்று உள்ளவர்கள் பழங்கள், தானியங்கள், காய்கறிகள், பயிர் உணவுகள் போன்றனவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம். இவற்றில் இளநீர் கிருமித் தொற்றினை எதிர்த்து போராடும் மூலப் பொருட்கள் கொண்டுள்ளதனால் மிக சிறந்த தெரிவாக காணப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: