பற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் ! உங்கள் பற்கள் விழுவது மாதிரி கனவு கண்டால் என்ன நடக்கும் !

0
4362

உங்கள் பற்கள் விழுவது மாதிரி கனவு கண்டால் என்ன நடக்கும்? வாங்க தெரிஞ்சுக்கலாம். நாம் தூக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவுகளும் நம்மிடம் எதாவது ஒன்றை சொல்லிச் செல்கின்றன. ஏன் சில சமயங்களில் நாம் கண்ட கனவுகள் கூட உண்மையாகுவதும் உண்டு. அப்படி இல்லையென்றால் அதற்குள் எதாவது அர்த்தம் ஒளிந்திருப்பதும் உண்டு.

நமக்கு வரும் கனவுகளை பற்றிய ஆராய்ச்சிப்படி பார்த்தால் பற்கள் விழுவதை போன்ற கனவுகள் நிகழ்ந்தால் அது நமக்கு பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனவின் அர்த்தம்
உங்களையே அறியாமல் உங்கள் பற்கள் விழுவதை போன்ற கனவு கண்டால் அதற்கு காரணம் வாழ்க்கையில் தோல்வி, வேலை இழப்பு, குடும்ப அழுத்தம் போன்ற சூழ்நிலைகளால் இந்த மாதிரியான கனவுகள் ஏற்படும். உங்கள் சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டை இழந்தது போன்ற ஒர் உணர்வு ஏற்படும்.

இழப்பதை போன்ற மனது
பணம் அல்லது குழந்தையை இழப்பது போன்ற உணர்வு இருந்தால் அப்பொழுது பற்கள் விழுகின்ற மாதிரி கனவு எழும். உள்ளே எழும் பயம் இந்த மாதிரியான கனவுகளுக்கு காரணமாக அமைகிறது.

வயதான தோற்றம்
நீங்கள் வயதாகுவதை நினைத்து மன அழுத்தம் கொண்டு இருந்தால் அப்பொழுது இந்த மாதிரியான கனவு நிகழும். வயது, உடல்நலம் மற்றும் வேறு சூழ்நிலைகளில் சரிவு ஏற்படும் போது இப்படி நிகழும். இதனால் உங்கள் சுய உணர்வை இழப்பீர்கள்.

குடும்ப உறுப்பினரின் உடல்நலம்
நீங்கள் அடிக்கடி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தை பற்றிய கவலை கொண்டு இருந்தால் உங்களுக்கு பற்கள் விழுவதை போன்ற கனவு எழும்.

பணப் பிரச்சினை
உங்களுக்கு சேமிப்பு இல்லாமல் பணத் தட்டுப்பாடு இருந்தால் பற்கள் விழுவது போன்ற கனவு எழுமாம். அதனால் உங்களுக்குப் பணப் பிரச்சினைகள் இருக்கும்போது இதுபோன்ற கனவுகள் வருவதுண்டு.

மன அழுத்தம்
இந்த மாதிரியான தகவல்கள் உண்மை என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் சுய நினைவை இழந்து இருக்கும் போது நம்முடைய ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் இந்த மாதிரியான கனவு விளைவை ஏற்படுத்துகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!
Next articleநீங்க இதுக்கு முன்ன காட்டு விலங்குகளின் எக்ஸ்ரே போட்டோஸ் பார்த்திருக்கீங்களா! இங்க பாருங்க!