உங்களின் ராசிப்படி எந்த ராசிக்காரர் உங்களுக்கு மோசமான எதிரியாக இருப்பார்கள் தெரியுமா!

0

உங்களின் ராசிப்படி எந்த ராசிக்காரர் உங்களுக்கு மோசமான எதிரியாக இருப்பார்கள் தெரியுமா?

உலகம் என்பது நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் கலந்திருப்பதாகும். ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை அவர்களின் சூழ்நிலையே முடிவு செய்கிறது. நமக்கு நூறு நண்பர்கள் இருந்தால் இரண்டு எதிரியாவது நிச்சயம் இருப்பார்கள். அனைவருக்கும் நல்லவராக இருப்பது என்பது அந்த கடவுளால் கூட முடியாத காரியம் ஆகும்.

இந்த சூழ்நிலையில் நமக்கே தெரியாமல் கூட நமக்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கலாம். நமது வாழ்வில் நிகழும் அனைத்து சம்பவங்களும் முன்பே நிர்ணயிக்க பட்டவைதான். அப்படி இருக்கும்போது நமது எதிரிகளும் முன்பே தீர்மானிக்க பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். நமக்கு ஆயிரம் எதிரிகளும், துரோகிகளும் இருந்தாலும் அதில் ஒருவர் மட்டுமே அதிதீவிரமாக நமது அழிவிற்காக காத்திருப்பார்கள்.

அப்படி காத்திருப்பவர்கள் நமது ராசியை பொறுத்து குறிப்பிட்ட ராசிக்காரராகத்தான் இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி உங்கள் ராசிப்படி எந்த ராசியில் பிறந்தவர்கள் உங்களுக்கு மோசமான எதிரியாக, துரோகியாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் மற்றும் மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு வில்லனாக இருக்கப்போவது இன்னொரு மேஷ ராசியில் பிறந்தவராகத்தான் இருக்கும். இருவருமே சமமானவர்களாக இருப்பார்கள் அதேசமயம் மூர்க்கமானவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் பொதுவாகவே தலைமை பண்பு உள்ளவர்கள். எனவே யார் தலைமை இடத்திற்கு வருவதென்று இவர்களுக்குள் எப்பொழுதும் சண்டைகள் ஏற்படும்.” ஒரு உரையில் ஒரு கத்திதான் இருக்கனும் ” என்று நினைப்பவர்கள்.

ரிஷபம் மற்றும் சிம்மம் ரிஷப ராசிகாரருக்கு வில்லனா இருக்கிறது சிம்ம ராசிக்காரர்கள்தான். அலட்சியமும், சோம்பேறித்தனமும் இவர்கள் கூடவே பிறந்தது. எப்பொழுதும் முன்னிலை வகிக்க இவர்கள் விரும்பமாட்டார்கள். இதுதான் சிம்ம ராசிக்கார்களுடன் இவர்களுக்கு மோதல் எழ காரணமாகும். இவர்கள் எப்பொழுதும் பிடிவாதமாக இருப்பவர்கள் எனவே தன் தனி வழியில் செல்லும் சிம்ம ராசிக்காரர்கள் இவர்களுடன் இருந்தால் விரைவில் எதிரியாகி விடுவார்கள்.

மிதுனம் மற்றும் கடகம் மிதுன ராசிக்காரர்களின் வில்லன் கடக ராசிக்காரர்கள் ஆவர். சுதந்திரமும், எச்சரிக்கை உணர்வும் இல்லாத மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் உணர்ச்சிவச படக்கூடிய கடக ராசிக்காரர்கள் எதிரியாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மற்றவர்களுடன் பேசுவதில் திறமையற்றவர்களாய் கடக ராசிக்காரர்கள் இருக்கும்போது மிதுன் ராசிக்காரர்கள் அதனை மிகவும் எளிமையாக செய்துவிடுகிறார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்கள் காமெடி என நினைத்து கொண்டு செய்யும் செயல்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களை கோபப்படுத்துவதாகவே இருக்கும்.

கன்னி மற்றும் கும்பம் இவர்களுக்குள் எழும் பிரச்சினை மிதுன- கடக ராசிக்காரர்களுக்குள் எழுவது போன்றதுதான். இவர்கள் இருவருமே சுயநலத்தை பெரிதாக என்னும் ராசிகள் ஆவர். கன்னி ராசிக்காரர்கள் தர்க்கரீதியாகவும், புத்திசாலித்தனமாகவும் அணுகும் போது கும்ப ராசிக்காரர்களோ அலட்சியமாகவும். மூர்கத்தனமாகவும் நடந்து கொள்வதால் இவர்களின் நட்பு முறிந்து விரைவில் எதிரியாக மாறிவிடுவார்கள்.

துலாம் மற்றும் மகரம் துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனில் இருவருமே பலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பழமைவாதத்தில் மூழ்கியிருக்கும் மகர ராசிக்காரர்கள் அனைவரிடம் சகஜமாக பழகக்கூடிய துலாம் ராசிகர்களுடன் பழகுவது மிகவும் கடினம். அந்த நொடியை அனுபவிக்க வேண்டும் என்று துலாம் ராசிக்காரர்கள் நினைக்கும் போது மகர ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மர்மமாகவும், விலகி இருப்பதும் துலாம் ராசிகர்களுக்கு மகர ராசிக்காரர்களிடம் பிடிக்காத குணமாகும்.

விருச்சிகம் மற்றும் கும்பம் விருச்சிக ராசிக்காரருக்கும், கும்ப ராசிக்காரருக்கும் இடையே இருக்கும் உறவானது கணிக்க முடியாத ஒன்றாகும். அவர்கள் இருவருமே மற்றவர்களால் கட்டுப்படுத்த படுவதையோ, கண்காணிக்க படுவதையோ விரும்பமாட்டார்கள். இதுவே அவர்களின் உறவை மிகவும் சுவாரஸ்யமானதாக வைத்திருக்கும். அவர்களுக்குள் பிரச்சினை எப்போது எதிரியாக மாறுகிறினார்கள் என்றால் அவர்களுக்குள் எழும் முரண்பாடுகளை கையாளும்போதுதான், இருவருமே தங்கள் நிலையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். தான் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள், இது அவர்களுக்குள் தீராப்பகையை உண்டாக்கும்.

தனுசு மற்றும் மீனம் வெளிப்படையாக பேசக்கூடிய தனுசு ராசிக்கார்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடிய மீன ராசிக்காரர்கள் எளிதில் காயப்படுத்தி விடுவார்கள். மீன ராசிக்காரர்கள் ஒருபோதும் மூர்ககத்தனத்தையோ, கசப்பு உணர்வுகளையோ அனுமதிக்க மாட்டார்கள். இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பேசக்கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கு எதிரியாகத்தான் இருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமா? இது உண்மையா? பொய்யா?
Next articleபத்து பெண்களில் ஒரு பெண்ணுக்கேனும் இந்த பாலியல் நோய் உள்ளதாம்! காரணம் என்ன தெரியுமா?