இயற்கை முறையில் முகத்தை பளபளப்பாக்க எளிய குறிப்புகள்!

0

இயற்கை முறையில் முகத்தை பளபளப்பாக்க எளிய குறிப்புகள்!

பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலந்து அக்கலவையை, வெயில் அதிகமாகப்படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவி வரும் போது சருமத்தில் ஏற்படும் கருமை அறவே மறைந்து போய்விடும்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவுதல், பயத்தம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசுதல் என்பன முகத்திற்க இயற்கையான பளபளப்பினையும் பொலிவினையும் வழங்குவதோடு, பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவரும் போது நகங்கள் கூடுதல் பலமடைந்து நகம் உடைவதும் குறைவதுடன், பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வரும் போது நகங்களுக்கு கூடுதல் பளபளப்பும் கிடைககின்றது.

ஒரு கரண்டி ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்து, அதில் ஒரு கரண்டி தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வரும் போது, சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடுவது மட்டுமன்றி, முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் நன்கு சிவப்பாக காட்சியளிக்கும்.

கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும் போது சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச்சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், என்பனவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசி, பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்து வரும் போது, நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பளபளக்கும்.

By:Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலன்கள் யாரை சேரும்?
Next article22-12-2018 இன்றைய ராசிபலன்!