வெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!

0
5190

வெந்தயம் அனைவரின் வீட்டு சமையல் அறையிலும் இருக்க கூடிய ஒரு பொருள். இதை சமையல் பொருளாக மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும் பயன்படுத்துவார்கள். இது உடலுக்கு குளிர்ச்சியை தரக் ஒன்றாக இருப்பதால், உடல் உஷ்ணத்தை குறைக்க இதை எடுத்து கொள்வார்கள். மேலும் இது சர்க்கரை நோய் முதல் அதிக கொழுப்பு வரை அனைத்திற்கும் இயற்கை தீர்வாக செயல்படும் ஆற்றல் கொண்டது.

இது என்னதான் இயற்கை மருந்துப் பொருளாக பயன்பட்டாலும், மற்ற மருந்துகளை போல் இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. பக்கவிளைவுகள் என்றவுடன் பயம் கொள்ள வேண்டியதில்லை. இங்கு வெந்தயத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளை பார்க்கலாம்.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு சிறந்த உதாரணம் வெந்தயமே. வெந்தயத்தை தினமும் 2 முதல் 5 கிராம் வரை இரு முறை எடுத்துக் கொண்டால், எந்த பக்க விளைவும் ஏற்படாது. வெந்தயத்தை அதிக அளவில்(100 கிராமிற்கு) மேல் எடுத்து கொள்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருப்பது குமட்டல். வெந்தயத்தை சாப்பிடும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு வாந்தி அல்லது குமட்டல் உணர்வோ ஏற்பட்டால் தவிர்த்துவிடுவது சிறந்தது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு அருமருந்தாக இருக்கும் வெந்தயமே, வயிற்று உபாதைக்கும் வழிவகுக்கும் என்பது உங்களுக்கு ஆச்சர்யமான ஒன்றாக இருக்கலாம். வெந்தயத்தை 100 கிராமை விட அதிகமாக ஒரே நேரத்தில் எடுத்து கொண்டால், அது உங்கள் குடல் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாக வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முடிந்தவரை வெந்தயத்தை அளவாக எடுத்து கொள்வது சிறந்தது.

வெந்தயம் சாப்பிடுவது சிலருக்கு பசியின்மையை ஏற்படுத்தும். வெந்தயத்தை தினமும் எடுத்து கொள்வது பசியின்மையை ஏற்படுத்துவதோடு, உணவில் எடுத்துக் கொள்ளும் கொழுப்பின் அளவை குறைகிறது. இது நம்மில் பலருக்கு சிறந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால், எல்லா கொழுப்பும் உடலுக்கு கேடு விளைவிப்பவை அல்ல. நீங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால் நிச்சயமாக இதனை சாப்பிடக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவுகோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிடும் எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். வெந்தயம் இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.

இயற்கையாகவே வெந்தயம் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களாக இருந்தால் வெந்தயம் உட்கொள்ளும்முன் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் மாத்திரைகளுடன் சேர்த்து வெந்தயமும் சாப்பிடும் போது சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்துவிடும். இது அதிக ஆபத்தானது.

கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளக்கூடாது. வெந்தயத்தில் காணப்படும் சப்போனின் என்னும் வேதிப்பொருள் கர்ப்பப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த பாதிப்பு கருச்சிதைவாய் கூட இருக்கலாம். நீங்கள் கர்ப்பமாக இல்லாவிட்டாலும் மாதவிடாயில் இருந்தால் வெந்தயம் சேர்த்துக்கொள்வது நல்லது. இதிலுள்ள சப்போனின் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்கும்.

சிலருக்கு வெந்தயத்தையோ அல்லது வெந்தயத்தால் செய்யப்பட்ட உணவுகளையோ சாப்பிட்டவுடன் உடலில் இருந்து ஒருவித நாற்றம் வெளிப்படும். உங்களுக்கு அந்த சூழ்நிலை ஏற்படவேண்டாமென்றால் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உங்களுக்கு வேண்டியதால் அலர்ஜிகள் ஏற்படலாம், குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே பட்டாணி, கடலை, சோயா போன்றவை அலர்ஜிகளை ஏற்படுத்துமாயின் வெந்தயம் அந்த அலர்ஜிகளை அதிகரிக்கும். தடிப்புகள், மூக்கில் நீர் வடிதல், கண்ணீர் வருதல் போன்றவை அலர்ஜியின் அறிகுறிகளாகும். அதுமட்டுமின்றி ஆய்வுகளின்படி சிலருக்கு மூச்சு திணறல், தலைவலி மற்றும் மயக்கம் போன்றவையும் ஏற்படலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: