இன்றைய ராசிப்பலன் 13.12.2018 வியாழக்கிழமை!

0

இன்றைய பஞ்சாங்கம்
13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.45 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

கடகம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.

துலாம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.

தனுசு
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சுபநிகழ்வுகள் நடைபெறும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதலிரவுக்கு பின் ஏன் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும் தெரியுமா! First Night in tamil (முதலிரவு) muthal iravu
Next articleஇத படிங்க அப்புறம் குளிங்க! காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா?