இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம்!

0

எரிபொருளின் விலையில் இன்றைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த முதலாம் திகதி எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த முதலாம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி டீசலின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.

அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனமும் டீசலின் விலையை பத்து ரூபாவினால் குறைத்திருந்தது.

என்றபோதும், பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 15.08.2022 Today Rasi Palan 15-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleகோட்டாபய தங்கியிருந்த ஹோட்டலுக்கு செலுத்தப்பட்ட பணம்!