இன்றைய உலகில் திகிலூட்டும் எதிர்மறையான சக்திகள் இருப்பது உண்மையா?
இன்றைய நவீன உலகில் எதிர்மறையான சக்திகள் இருப்பது என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.
ஒரு சிலர் அதனை மூடநம்பிக்கையென்று கூறுவார்கள் ஆனால் எதிர்மறையான சக்திகள் இருப்பது சில விஞ்ஞான ஆய்வுகளிலும் உறுதி செய்யபட்டுள்ளது.
அவ்வாறான சக்திகள் அருகில் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம்.
அமானுஷ்ய நடமாட்டம்
நாம் ஒரு இடத்தில் இக்கும் பொழுது திடீரென காரணமே இல்லாமல் உடல் நடுங்கினலோ அல்லது பதட்டம் ஏற்பட்டாலோ, அங்கு ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யலாம்.
ஒரு அமைதி நிறைந்த இடத்தை கடக்கும் போது, விசித்திரமான சத்தத்தை கேட்டாலோ அல்லது பெயரை சொல்லி அழைத்தாலோ, சட்டென்று திரும்பி பார்க்க கூடாது. ஏனென்றால் திரும்பி பார்ப்பதனால் எதிர்மறையான சக்திகள் எம்மை தொடரும்.
நம்மை சுற்று விசித்திரமான விடயங்கள் நடந்தால் அது நமது 6வது அறிவுக்கு தெரியும் என்பார்கள். அந்த அறிவிற்கு நம்மை யாராவது கண்கானிப்பது போன்று தோன்றினால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.
அங்கு ஏதோவொன்று நம்மை கண்கானிக்கும். இரவில் சிகப்பு நிற ஆடையிலோ அல்லது வெள்ளை நிற ஆடையிலோ யாராவது தென்பட்டால், அது நிச்சயம் அமானுஷ்யம் தான் அதை மோகினி , காட்டேரி என்று சொல்வர். ஆகையால் இளம் ஆண்கள் அவ்வாறு எதையாவது பார்த்தால் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட வேண்டும்.
ஒரு இடத்தில் தீடீர் துறுநாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அவ்விடத்திலிருந்து நகர வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் அமானுஷ்யம் இருப்பதை உறுதிச் செய்யப்படும்.