இந்த 5 ராசிகளில் யாரை திருமணம் செய்தாலும் இந்த உலகில் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி !

0

அனைவருக்கும் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு திருப்புமுனையாக இருப்பது திருமணம்தான்.

ஆனால் அந்த மாற்றம் மகிழ்ச்சியை தருமா அல்லது அதிர்ச்சியை தருமா என்பது அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் துணையை பொறுத்தது. சில ராசிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் வாழ்க்கையை அழகானதாக மாற்றக்கூடும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சையானதாக மாற்றுவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெண்களால்தான் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

குறிப்பாக இந்த ராசி பெண்களை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால் உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

சிம்மம்
அதிக ஆசைகள் உள்ள கணவருக்கு சிம்ம ராசி பெண்கள் மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள், கணவரின் குறிக்கோளை தீர்மானிப்பதிலும் அதை அடைவதற்கும் இவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் சக்திவாய்ந்தவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் தேர்வுகள் மற்றும் விருப்பங்கள் எப்பொழுதும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் ஒரு சிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அது உங்கள் அதிர்ஷ்டம்தான். ஆனால் அதிலும் ஒரு எச்சரிக்கை உள்ளது, அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் யாரோ ஒருவர் கடுமையாக பாதிக்கப்படப்போகிறார்கள் என்று அர்த்தம். அவர்களை கட்டுப்படுத்தவது என்பது மிகுந்த சிரமமான ஒன்று.

எனவே சிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் முன் நன்கு யோசித்துக்கொள்ளவும். ஆனால் நீங்கள் சிம்ம ராசி பெண்ணின் இதயத்தை வென்றுவிட்டால் தன் வாழ்வின் இறுதிவரை உங்களை ஆழமாக நேசிப்பார்கள்.

தங்களின் அனைத்து உடைமைகளையும் தன் துணையுடன் பகிர்ந்துகொள்ள தயங்கமாட்டார்கள். அவர்கள் கோபப்பட்டுவிட்டால் உடனடியாக அங்கிருந்து ஓடிவிடுங்கள், அவர்கள் கோபம் தணியும்வரை கண்ணில் பட்டுவிடாதீர்கள்.

விருச்சிகம்
பாராட்டை விரும்பும் ஆண்களுக்கு விருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள்.

அவர்கள் இயற்கையாகவே அதிக ஆர்வம் கொண்டவர்கள், அதனால் உங்கள் வாழ்க்கையை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள்.

ஆனால் இவர்கள் அமைதியானவர்களாக இருக்கமாட்டார்கள். இவர்கள் செய்யுமோ ஒவ்வொரு செயலுக்கு பின்னரும் ஒரு உள்நோக்கம் இருக்கும்.

இவர்களின் வெளிப்படையான குணம் எப்பொழுதும் அவர்களை மற்றவர்களை விரும்ப வைக்கும்.

கன்னி
இவர்கள் கடுமையான வெளித்தோற்றத்தை கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் துணைக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள்.

இவர்கள் சுயநலம் இல்லாதவர்களாக இருப்பார்கள், பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் தங்கள் துணையின் வாழ்க்கையில் அனைத்தையும் நன்றாக இயங்கவைக்க உதவுவார்கள்.

தங்கள் கணவர் செய்யக்கூடிய அனைத்திலும் இவர்களின் பங்கு இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் தங்கள் கணவரின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற விரும்புவார்கள். அவர்களின் தேவை எல்லாம் அவர்களுக்கு துணையாக இருக்கக்கூடிய கணவர்தான்.

இவர்களின் ஆற்றல் அளப்பரியதாகும். எந்த சூழ்நிலையிலும் இவர் தன் கணவரை நிராகரிக்கமாட்டார், அவர் மட்டுமின்றி அவர் குடும்பத்தையும் சரி, அவர்களின் கடமையையும் சரி அவர்கள் ஒருபோதும் தவிர்க்கமாட்டார்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் சோர்வடையமாட்டார்கள்.

இவர்கள் சுறுசுறுப்பானவர்கள் மட்டுமல்ல உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நம்பிக்கையே உங்கள் குடும்பத்தை முன்னேற்ற உதவும்.

கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தால் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கப்போவது நிச்சயம். இவர்கள் மென்மையான அதேசமயம் நம்பகத்தன்மை அதிகம் உடையவர்கள்.

இவர்களை ஆராதிக்க வேண்டியது கணவரின் கடமையாகும். அவர்கள் பலவீனமாக இருக்கும்போது தனக்கு பலமான துணை வேண்டுமென்று விரும்புவார்கள்.

தன் மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டால் அதற்கு உதவியாய் இருந்தவரை எப்பொழுதும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

தன் கணவருக்கும், குடும்பத்திற்கும் இறுதிவரை தன் அன்பையும், ஆறுதலையும் வழங்குவார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2020 புத்தாண்டு பலன்கன் சீறி பாயும் சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம் !
Next articleடிசம்பர் மாதத்தில் யாருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் வரும் தெரியுமா? இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்!