இந்த ராசிக்காரர்களின் நட்போ அல்லது காதலோ கிடைத்தால் மிஸ் பண்ணிடாதீங்க! இவங்க ரொம்ப அரவணைப்பானவங்களாம்!

0

இந்த ராசிக்காரர்களின் நட்போ அல்லது காதலோ கிடைத்தால் மிஸ் பண்ணிடாதீங்க! இவங்க ரொம்ப அரவணைப்பானவங்களாம்!

இந்த ராசிக்காரர்கள்

இந்த உலகத்தில் கோடிக்கணக்கில் பணம் இருந்தும் சிலரது முகத்தில் சிரிப்பு என்பதே இருக்காது. ஆனாலும் சிலர் ஏழையாக இருந்தாலும் முகம் நிறைய புன்னகையுடன் இருப்பார்கள். இதற்கு அவர்களின் ராசிக் கூட ஒரு காரணம். அவர்கள் தெய்வம் தந்த வரம் என அதை எடுத்துக் கொள்வது அவசியம். அப்படி எப்போதும் புன்னகையுடன் கூடிய முகத்துடன் இருக்கும் ராசியினர் யார் என்பதைப் பார்ப்போம்.

கடகம்: மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் பொதுவாக அன்பானவர்களாகவும், தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முழு மனதுடன் கவனித்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் பொறுமையுடன் எந்த ஒரு சூழலையும் கையாள்வார்கள்.​

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக, ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

யாரேனும் ஒருவர் தாழ்வு மனப்பான்மையுடன் அல்லது, கவலைகளுடன் இருப்பதாக உணரும்போது அவர்களின் மனதை தேற்றி அவர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மேலும் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்து, உற்சாகப்படுத்தும் வகையில் நேர்மறையான பல வார்த்தைகளைப் பேசி, இன்முகத்துடன் அவர்களை வலுப்படுத்துவார்கள். சிரிக்க வைப்பார்கள்.​

தனுசு: தனுசு ராசியினர் நம்பிக்கை மற்றும் உற்சாகம் தரக்கூடியவர்கள். இவர்கள் சற்று சாகச மனநிலை கொண்டவர்கள்.

இவர்கள் மட்டுமல்லாமல், சோகத்துடன், கவலையுடன் இருக்கும் நபர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு சாகச பயணங்கள், இன்ப சுற்றுலா என மகிழ்ச்சியின் எல்லையைத் தொடுவார்கள். இவர்களுடன் இருந்தால் எந்த ஒரு மந்தமான நாட்களிலும், மன மகிழ்ச்சி நிறைந்த அற்புதமான நாளாக உணர முடியும்.

மீனம்: மீன ராசியில் பிறந்தவர்கள் கருணை, அன்பு மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இன்முகமும், சிரிப்பும் மற்றவர்களுக்கு ஒருவித நேர்மறை ஆற்றலை வழங்குவதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் மற்றவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களின் சிக்கல்களைத் தீர்க்க முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 26.10.2021 Today Rasi Palan 26-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 27.10.2021 Today Rasi Palan 27-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!