இந்த ராசிக்காரருக்கு ராஜயோகம் தானாம் ! இந்தவாரம் நீங்கள் கவனமாக இருங்கள் ! இந்த வார ராசிபலன் !

0

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிறைய நல்லது நடக்கும். தொழிலில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.

உங்க பெர்சனல் லைப்ல சந்தோஷமான விசயங்கள் நடக்கும். உங்களுடைய குழந்தை பருவ நண்பரை பார்ப்பீங்க. உங்க கல்யாண வாழ்க்கையில ரொம்ப அமைதியாக இருப்பீங்க சந்தோஷமாக இருக்கும். அப்செட் ஆகாதீங்க. காதல் வாழ்க்கையில கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம்.

ரிஷபம்
இந்த வாரம் உங்க நிதி நிலைமை நன்றாக இருக்கும். வர்த்தகர்களுக்கு இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும் சில நேரங்களில் ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இந்த வாரம் எதையும் எடுக்காதீங்க அது உங்களுக்கு சிக்கலாக போய் விடும்.

உங்க பிசினஸை நீங்க விரிவுபடுத்த இது நல்ல வாரம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் ரொம்ப ஸ்லோவாக போகும். அந்த நிலைமை மெதுவாக மாறும். உங்க உடல் ஆரோக்கியத்தில சில மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு இது சவாலான வாரம். குடும்ப வாழ்க்கை சராசரியாகவே இருக்கும் கவலை வேண்டாம்.

மிதுனம்
இந்த வாரம் உங்க வீட்டில் நடக்கும் சம்பவங்களால் நீங்க மனதளவில் பாதிக்கப்படுவீர்கள். உங்க உறவுகள் சொந்தங்கள் இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. உங்க வாழ்க்கையில நீங்க அன்பானவங்க மேல அன்பை அதிகப்படுத்துங்க. ரொம்ப சாதாரணமாக பேசுங்க சண்டை போடாதீங்க.

யாரையும் டாமினேட் பண்ணாதீங்க புரிஞ்சு பேசுங்க. உங்க கல்யாண வாழ்க்கையில நீங்க கவனமாக இருக்கணும். வாழ்க்கை துணையோட நீங்க நேரத்தை செலவழியுங்க. இந்த வாரம் உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. தலைவலி, கண் வலியால் பாதிக்கப்படுவீங்க. முதுகு வலியும் வரலாம் கவனமாக இருங்க.

கடகம்
இந்த வாரம் உங்க குடும்ப உறவுகளிடைய சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். இந்த வாரம் எல்லாமே உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். உங்க கோபத்தை கட்டுப்படுத்துங்க. டென்சன் வரலாம் கவனமாக இருங்க. இந்த வாரம் பண விவகாரத்தில் உங்களுக்கு நல்லதாகவே இருக்கும்.

உங்க பேங்க் பேலன்ஸ் அதிகமாகும். வியாபாரம் பண்றவங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும். வேலை செய்யிறவங்களுக்கு பளு அதிகமாகும். அதுவே மன அழுத்தத்தை அதிகரிக்கும். கவனக்குறைவாக இருக்காதீங்க. கவனமாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்த்துடுங்க.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்க வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனாலும், ஓவர் நம்பிக்கையினால எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம். வீட்டிலும் சூழ்நிலைகள் சாதகமாவே இருக்கக்கூடும்.

பெற்றவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட முடியும். திருமணம் ஆகாதவரா இருந்தால், உங்கள் வீட்டார் உங்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தக் கூடும். நிதி நிலைமையும் இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும். ஆரோக்கியத்துல கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது.

கன்னி
இந்த வாரம் நீங்க முக்கியமான வேலையை முடிப்பதில் ரொம்பி பிஸியா இருப்பீங்க. இருந்தாலும் எடுத்த வேலையை வெற்றிகரமா முடிப்பீங்க. இந்த வாரம் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும். நிதி நிலைமையை பொருத்தவரை இது வரையிலும் இருந்து வந்த தடங்கலும் காணாமல் போய் நிதி வசதியும் கூடிடும்.

திருமணம் செய்த தம்பதிகளுக்கு இடையில் இனிமையான சம்பவங்கள் நிகழக்கூடும். காதலில் ஈடுபட்டுள்ளவர்கள், ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவதை தவிர்ப்பது நன்மை விளைவிக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, மாணவர்களாக இருந்தால், படிப்பில் சில தடைகள் உண்டாகக்கூடும். மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதை தவிர்த்து உங்கள் சுய சிந்தனையோடு முடிவெடுப்பது நல்லது. வர்த்தகர்கள் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்வது நல்லது. தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்த்தால் இழப்புகள் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

பணியாளர்கள் வேலை விஷயத்தில் பிஸியாக உணர்வீர்கள். ஒரே சமயத்தில பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்ய வேண்டியதிருக்கும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியா அமைதியா நகரும். நிதி நிலைமை கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். வரவை விட செலவுகள் அதிகமா இருக்கும்.

விருச்சிகம்
கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவங்களுக்கு இந்த வாரம் அமோகமா இருக்கும். ரொம்ப நாளா இருந்து வந்த பிரச்சனை வார மத்தியில தீர்க்கப்படுறதுனால ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. குடும்ப வாழ்க்கையும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

குடும்பத்தோடு பிக்னிக் அல்லது சினிமா போய்ட்டு வர்றதுக்கும் நேரம் கிடைக்கும். உங்க மனைவியோட ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. நிதி நிலைமையும் இந்த வாரம் ரொம்ப சிறப்பா இருக்கும். வாரக் கடைசியில வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள நேரிடும்.

தனுசு
இந்த வாரம் எடுத்த வேலையை முடிக்க ரொம்பவே போராட வேண்டியதிருக்கும். அதனால வேலையை திட்டமிட்டு செய்தால் சிக்கல் இல்லாம முடிக்க முடியும். கவனமா இருப்பது நல்லது. ஏதாவது சங்கடங்கள் இருந்தால் உங்களோட நெருங்கிய நண்பரோட மனசு விட்டு பேசுனா மனபாரம் குறையக்கூடும்.

உடல் நலத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. நிதி நிலைமை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம். கூடுதல் வருமானத்துக்கு கூடுதலா உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியான சூழல் நிலவும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உண்டாகலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் கொடுத்தாலும், போகப் போக நார்மல் சூழ்நிலைக்கு மாறிடும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பது நல்லது. குழப்பம் இருந்தால் உங்கள் நண்பரிடம் ஐடியா கேட்பது நல்லது. பணியாளர்கள் சக ஊழியர்களுடன் நெருக்கத்தை வளர்ப்பது அவசியம்.

நிதி நிலைமை நார்மலாக இருக்கும். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளினால் லாபம் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையிலே சந்தோஷம் நிலைக்கணும்னா, உங்களோட நடவடிக்கையை கொஞ்சம் மாத்திக்கிறது நல்லது. உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கணும்னா உங்களோட எடையை குறைப்பது அவசியம்.

கும்பம்
பணியாளர்கள் இந்த வாரம் ரொம்பவும் அமைதியாக இருப்பது நல்லது. கூடுதல் வேலைச்சுமை ஏற்பட்டாலும் சக ஊழியர்களுடன் சேர்ந்துகொண்டு வேலையை முடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படக்கூடும். இது உங்களைப் பத்தி உங்களோட உயர் அதிகாரிகள் மத்தியில் நல்ல எண்ணத்தை உண்டாக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கு. உங்க வாழ்க்கையையே மாற்றக்கூடிய முடிவெடுக்க நேரிடும்.

அது உங்களோட குடும்ப உறுப்பினர்களுக்கு பிடிக்காமல் போகலாம். உங்கள் பெற்றோர் உங்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். ரொம்பவே கவலைப்பட்டீங்கன்னா, அது உங்களோட உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை அவ்வளவு நல்லதாக இல்லை. என்னதான் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் கூட, எதிர்பார்த்த மாதிரி பணம் வராது. பணியாளர்கள் எடுத்த வேலையை வெற்றிகரமா முடிப்பீங்க. அலுவலகத்திலும் சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் உங்களோட உழைப்பை பாராட்டுவார்கள்.

திருமண வாழ்க்கையும் இந்த வாரம் நார்மலாகவே இருந்து வரும். உங்கள் மனைவியோடு கொஞ்சம் மனசு விட்டு பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். காதலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவனமாக நடந்து கொள்வது அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Adakkam Udaimai Adhikaram-13 திருக்குறள் அடக்கமுடைமை அதிகாரம்-13 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next article2020 ம் ஆண்டு பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா?