இந்த ஆண்டில் ஏழரை சனி, விரைய சனி, ஜென்ம சனியால் எந்த ராசியினருக்கு நெருக்கடியான காலம் ஆரம்பம்!

0

இந்த ஆண்டில் ஏழரை சனி, விரைய சனி, ஜென்ம சனியால் எந்த ராசியினருக்கு நெருக்கடியான காலம் ஆரம்பம்!

மகர ராசியில் சனிபகவான் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும், மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனியாகவும் உள்ளது.

ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார்.

ஏழரை சனி என்றால் என்ன அதனால் என்ன பாதிப்பு வரும் என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று ஜென்ம அமரப்போகும் சனிபகவான் அங்கிருந்து மேஷம், சிம்மம், விருச்சிக ராசிகளைப் பார்வையிடுகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம், மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபடலாம். அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய் சாற்றியும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

வீட்டு வாசலில் பச்சரிசி கோலம் போட ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனியாகவும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனி காலமாகவும் மாறுகிறது.

கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் சனியால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி ஆரம்பமாகிறது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம் ஆரம்பமாகிறது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் இரண்டரை ஆண்டு காலம் கவனமாகவும் வேலை செய்யும் இடங்களில் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் சனி பெயர்ச்சியாகவும் மாறுகிறது.

மிதுன ராசிக்காரர்கள் கடந்த 5 ஆண்டு காலம் பட்ட கஷ்டங்கள் முடியப்போகிறது.

கன்னி ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தான சனியாக மாறி நன்மை செய்யப்போகிறார்.

அதே நேரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய சனியாக மாறி அமர்கிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதனுசு ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்துள்ளதால் இந்த 3 ராசிக்காரர்கள் தான் அதிக பலனை அடைவார்கள்.
Next articleமுப்பது வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் அதிஸ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள்! விபரீத ராஜயோகங்கள் காத்திருக்கின்றது.