இந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல்! சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது!

0
115

இந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல்! சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது!

இந்தியாவில் அமைதியாக வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 111 நகரங்களை ஆய்வு செய்து ‘நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020’ என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அந்நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதார திறன், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலை நேற்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, வெளியிட்டார்.

இந்த 2 பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த தலா 10 நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: