ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பேரோட அந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென்றால் இந்த ஒரே ஒரு பொருள் மட்டும் போதும்!

0

ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பேரோட அந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென்றால் இந்த ஒரே ஒரு பொருள் மட்டும் போதும்!

பாதாம் பிசின் பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

உடல் எடை கூட, குறைக்க

பாதாம் பிசினுக்கு அதிகளவு இருக்கும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், குறைவான எடை கொண்டவர்கள் எடை கூடவும் செய்யும் ஒரு சிறப்பு ஆற்றல் இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.

உடல் நலம்

நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வரும் நபர்கள் மற்றும் தற்போதும் நோயால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்கு தரும். நீண்ட கால நோயை போக்குவதற்குண்டான நோயெதிர்ப்பு சக்தியையும் பெருக்கும்.

ஆண்மை குறைபாடுகள்

வெப்பம் அதிகம் நிறைந்த இடங்களில் பணிபுரிவதாலும், இறுக்கமான கால்சட்டைகள்(பாண்ட்) அணிவதாலும் உஷ்ணம் அதிகமாகி இன்று ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.

வெள்ளைப்படுதல் குணமாக

உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த பிரச்சனை குணமாக மூன்று நாட்கள் தினமும் காலை,மாலை,இரவு என மூன்று வேலையும் ஊறவைத்த பாதாம் பிசினை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.

புண்கள்

வெட்டு காயங்கள், மற்றும் தீயினால் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு சற்று நாளாகும். இக்காயங்களை குணப்படுத்த நவீன மருந்துகளை பயன்படுத்தினாலும் அவ்வப்போது தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாளைய தினம் மகரம் செல்லும் குரு பகவான்! நவம்பர் 20 ஆம் தேதி வரை பணப் பிரச்சனையால் பாரிய பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்!
Next articleசனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு பகவான்! ராஜ-யோக பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசியினர் இவர்கள் தான்!