குறைவான விந்தணு உற்பத்தி, விறைப்புத்தன்மை பிரச்சனை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது!

0
6416

இன்றைய காலத்தில் நிறைய ஆண்கள் பாலியல் பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். அதில் குறைவான விந்தணு உற்பத்தி, விறைப்புத்தன்மை பிரச்னை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபட இயற்கை வழிகளை நாடினால், பாலியல் பிரச்சனை நீங்குவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

உடலுறவில் ஈடுபடும் போது முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான தீர்வைத் தான் பார்க்கப் போகிறோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைப்பவைகள் என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பால், தேன், இஞ்சி:

ஒரு டம்ளர் நன்கு கொதிக்க வைத்த பாலில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 சிறிய துண்டு இஞ்சியை சேர்த்து கலந்து, தினமும் குடித்து வர, உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கலாம்.

வெங்காய விதை:

1 டம்ளர் நீரில், 1 டீஸ்பூன் வெங்காய விதையை சேர்த்து நன்கு கலந்து, உணவு உண்பதற்கு முன் குடித்து வர, முன்கூட்டியே விந்து வெளிவருவதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம், சோம்பு, கேரட்:

ஆண்கள் வாழைப்பழம், சோம்பு, கேரட் போன்றவற்றை தினமும் உட்கொண்டு வந்தால், அதனுள் உள்ள பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

பால் மற்றும் அஸ்பாரகஸ்:

ஒரு டம்ளர் கொதிக்க வைத்த பாலில், சிறிது அஸ்பாரகஸ் வேர் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

பூண்டு:

முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கு பூண்டு மிகவும் சிறப்பான நிவாரணப் பொருள். ஆண்கள் தினமும் 2-3 பற்கள் பூண்டு சாப்பிட்டு வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கேரட், முட்டை மற்றும் தேன்:

கேரட்டை பொடியாக நறுக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும் மற்றும் அரைவேக்காட்டில் வேக வைத்த முட்டையையும் சாப்பிட வேண்டும். இதனால் ஆண்களின் பாலியல் பிரச்சனை நீங்கும்.

குங்குமப்பூ:

குங்குமப்பூ மற்றொரு சிறப்பான பாலுணர்வுத் துண்டும் பொருள். முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைக் கொண்ட ஆண்கள், குங்குமப்பூவை தினமும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: