ஆசையுடன் குழந்தையை தூக்கிய தோனி! வீறிட்டு அழுத குழந்தை, பின்னர் நடந்த சுவாரஷ்யங்கள்! வைரலாகும் வீடியோ!

0
944

மிஸ்டர் கூல் கேப்டன் தோனிக்கு உலக அளவில் ரசிகர் இருந்த போதிலும், இந்தியாவில் ஒரு சிறு குழந்தை அவரை பார்த்து பயந்து அழுதுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

கடந்தாண்டு சரியாக விளையாடவில்லை என்று கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்ட தோனி, ஆஸ்திரேலியத் தொடரின்போது ‘மேன் ஆஃப் த சீரிஸ்’ பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றார். முன்னதாக நேற்றைய நாக்பூர் ஆட்டதில் ரசிகர் ஒருவர் தோனியை கட்டிப்பிடிக்க துரத்தி வந்தார். இதனைப் பார்த்த தோனி, ரசிகரிடம் சிக்காமல் சிறிது நேரம் ஓடிப்பிடித்து விளையாடினார்.

பின்னர், ரசிகரின் அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டு ஓடுவதை நிறுத்தினார் தோனி. உடனே தோனியின் காலில் விழுந்த ரசிகர், அவரை கட்டியணைத்துவிட்டு ஓடிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் சிறு குழந்தை ஒன்று தோனியை பார்த்து பயந்து ஓடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவானது சமீபத்தில் மும்பையில் நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்ற போது எடுத்ததாக தெரிகிறது. அதில் கலந்துகொண்ட தோனியைப் பார்க்க, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்துப் பேசிய தோனி, சிலருடன் போட்டோக்களும் எடுத்துக்கொண்டனர்.

அங்கிருந்த குழந்தை ஒன்றை ஆசையுடன் தூக்கக் கைநீட்டினார். ஆனால் தோனியைப் பார்த்து பயந்த குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது. அவரின் அம்மா குழந்தையைத் தூக்க, புன்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் தோனி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமருத்துவர்களின் அலட்சியம்! ஐ லவ் யூ அப்பா என கூறியபடி உயிரிழந்த அழகான சிறுமி! பின்னணி என்ன!
Next articleமணமேடையில் சூப்பராக குத்தாட்டம் போட்ட மணமகள்! சிலையாக நின்ற மாப்பிள்ளை! வைரலாகும் வீடியோ!