ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்! வீடு புகுந்து கத்தியால் தாக்கிய தமிழ் இளைஞர்!

0
740

சிங்கப்பூரில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆயுள் சிறை விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் செவிலியர் மாணவியான 20 வயது இளம்பெண்ணை 34 வயது இந்திய வம்சாவளி தமிழர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் குறித்த இளம்பெண்ணிற்கு வேறு காதலர் இருந்துள்ளார். இருப்பினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி அவரிடம் சம்மதம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த இளம்பெண்ணின் குடியிருப்புக்கு சென்ற அவர் எடுத்துச் சென்ற கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குறித்த இளம்பெண்ணை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே சம்பவயிடத்தில் இருந்து தப்பிய இளைஞரை பொதுமக்கள் சேர்ந்து பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், கொலை செய்யும் நோக்குடன் குறித்த இளம்பெண்ணின் குடியிருப்புக்கு செல்லவில்லை எனவும்,

அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தால் அவரது கண்முன்னே தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணியிருந்ததாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் குறித்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கும்போது ’சாவுடி’ என கத்தியவாறே ஆக்ரோஷ்மாக தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் வக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் சிறை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: