ஆகஸ்ட் மாத ராசி பலன்கள். இந்த மாதம் பண அதிஷ்டம் இந்த ரசிக்காரர்களுக்கு!

0

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள். இந்த மாதம் பண அதிஷ்டம் இந்த ரசிக்காரர்களுக்கு!

ஆகஸ்ட் மாதத்தில் மேஷத்தில் ராகு, கடகத்தில் சுக்கிரன், சூரியன் சிம்மத்தில் புதன், துலாம் ராசியில் கேது மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

16ஆம் திகதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஆகஸ்ட் 10ஆம் திகதி செவ்வாய் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து உச்சம் பெற்று அமரப்போகிறார்

 நவ கிரகங்களின் சஞ்சாரம் கிரகங்களின் ராசி மாற்றத்தினால் 12 ராசிக்காரர்களுக்கு  பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.  .  

மேஷம்

மேஷ ராசிக்கு சனி வக்ரத்தால் வேலை, வியாபாரம் சற்று மந்தமாகலாம். குரு விரய ஸ்தானமான 12ல் வக்ர நிலையில் இருப்பதால் அதிக அலைச்சல், அதிக செலவுகள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

மற்றபடி பல்வேறு விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். சுப நிகழ்வுகள் சாத்தியமாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

ரிஷபம்

குருவின் வக்ர நிலையால் குடும்ப பிரச்னைகள் தீரும். வேலை சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

சனியால் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு, மனை, வாகனம் போன்ற சொத்து வாங்கும் யோகம் உண்டு. காதல் விஷயங்கள் மகிழ்ச்சியைத் தரும். எதிலும் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். 

மிதுனம்

மிதுனம் ராசிக்கு இந்த மாதம் மகிழ்ச்சியைத் தரும் பல்வேறு விஷயங்கள் நடக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும். பணியிடத்தில் பெரிய பொறுப்பைப் பெறலாம்.

தந்தையின் உதவியால் பணம், உயர்வு கிடைக்கும். குருவின் அமைப்பால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியைக் கடைப்பிடிக்கவும்.காரிய முடக்கம் உண்டாகலாம். சனியின் அமைப்பால் பணியிடத்தில் சற்று பணிச்சுமை இருக்கும். எந்த ஒரு வேலை செய்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்க தாமதமாகலாம்.

கடகம்

கடக ராசிக்கு தொழில் மற்றும் வேலையின் முன்னேற்றம் பெறக்கூடிய மாதமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும் சாதக முடிவு கிடைக்கும்.

சனியால் சில விஷயங்களால் எப்போதும் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்ப உறவில் இனிமை இருக்கும். குருவால் புனித யாத்திரை செல்ல வாய்ப்பு, மகான்களின் தரிசனம் உள்ளிட்டவை கிடைக்கும். பணியிடத்தில் நற்பெயர், மரியாதை அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம். உங்கள் வேலையில் கவனமும், பொறுமையும் அவசியம். நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெற முடியும்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியிடம், வியாபார சந்தையில் உங்கள் எதிரிகள் ஆதிக்கம் அதிகரிக்கும். அதனால் எச்சரிக்கையாகச் செயல்படவும். பணியிடத்திலும் சிலரின் சதிக்கு பிரச்னையை சந்திக்க வேண்டியது இருக்கும். மரியாதை அல்லது விருதுகள் உங்களுக்கு கிடைக்கலாம். 

கன்னி

கன்னி ராசிக்கு சாதகமான மாதமாக ஆகஸ்ட் மாதம் இருக்கும். சுப காரியங்களுக்காக சில செலவுகள் அதிகரிக்கும். பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம், வேலை என எதிலும் சிறப்பாக சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பல மடங்கு கிடைக்கும். முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்கு சற்று ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டிய மாதமாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், மாதத்தின் பிற்பகுதியில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் வாங்குவது, கொடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்கவும், இல்லையெனில் நிதி இழப்பைத் தடுக்க முடியாது. பண விஷயங்களில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்கவும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் பணி அழுத்தம். சில குடும்ப பிரச்னைகள் சந்திக்க நேரிடும். பல சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் சற்று உறவு மோசமடையலாம். சோம்பல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், சுறுசுறுப்பாக இருக்க முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்கு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் எல்லா வகையிலும் வெற்றியைப் பெறலாம். இந்த நேரத்தில் தொழில், வேலை தொடர்பான நல்ல பலன்களைப் பெறலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சி கைகூடும். உங்களின் கடினமாக உழைப்பால் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திடீர் பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குருவின் இந்த வக்ர நிலையால் சில மன அழுத்தத்தைத் தரக்கூடிய சம்பவங்களும், பிரச்னையை எதிர்கொள்ளவும் நேரிடும்.

மகரம்

மகர ராசிக்கு ஆகஸ்ட் மாதம் கலவையான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த மாதத்தில் தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள்.பொருளாதாரச் சவால்கள் ஏற்படும்.போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்க தாமதமாகலாம். சனியால் உங்களை நிரூபிக்கக் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். குருவால் கடினமான சூழ்நிலைகளைக் கடின உழைப்பால் எளிதில் சமாளிப்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். 

கும்பம்

கும்ப ராசிக்கு இந்த ஆகஸ்ட் மாதம் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். உத்தியோகத்தில் சில சிரமங்களும், பணப்பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாதத்தின் தொடக்கத்தில் சில எதிரிகளை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் முன்னேற்றம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். முதலீடு செய்யும் முன் வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

மீனம்  

மீன ராசிக்கு ஆகஸ்ட் மாதம் முன்னேற்றம் தருவதாக இருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நலம் விரும்பிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.

இந்த மாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்துடன் வேலை, வருமானம் கூடும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சனியின் இந்த வக்ர நிலை காரணமாக நிதி நிலை மேம்படும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சனியின் இந்த வக்ர நிலை காரணமாக நிதி நிலை மேம்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்!
Next articleவிலைமகள் vilai magal kavithai Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-38)