ஈஸியா உடல் எடையை குறைக்கலாம்! இலங்கை மக்களின் ரகசியம்!

0

சாதத்தினை சமைக்கும்போது அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும் என இலங்கை ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

நாம் சாப்பிடும் சாதத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் சத்துக்களே அதிக அளவில் உள்ளன.

அதனால் சாதத்தினை அதிக அளவு சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கவும், நீரிழிவு நோய்க்கான அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

அமெரிக்கர்கள் அதிக அளவில் சாதத்தை உடகொள்வதால், கலோரிகள் அதிகரித்து உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், சாதம் சமைக்கும் போது அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும் என இலங்கை நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

(National Meeting – Exposition of the American Chemical Society (ACS)) என்ற கலந்தாய்வில், இலங்கையில் உள்ள வேதியியல் அறிவியல் கல்லூரியின் நிபுணர்கள் குழு கலந்துகொண்டு பேசியதாவது, சாதத்தை குக்கரில் வைக்காமல் ஒரு பானையில் சமைக்க வேண்டும்.

அப்போது, தண்ணீர் நன்கு கொதித்ததும், அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பின் அரிசியை சேர்த்து குறைவான தீயில் 30-40 நிமிடம், சாதத்தை நன்கு வேக வைத்து இறக்கி வடிகட்ட வேண்டும்.

அதன்பின்னர் இந்த சாதத்தை 12 மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும்.

இந்த முறையில் சாதத்தை குளிர வைக்கும் போது, அதில் உள்ள ஸ்டார்ச் வெளியிடப்பட்டு, அரிசியின் வெளியே உள்ளே துகள்களுடன் கூட்டிணைந்து, அரிசியில் உள்ள சர்க்கரை எதிர்ப்புத்தன்மை கொண்ட ஸ்டார்ச்சாக மாற்றும்.

சாதத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்க்கும் போது, அது ஸ்டார்ச் துகள்களின் உள்ளே நுழைந்து, சர்க்கரையை செரிமான நொதிகளாக்கும்.

இதனால் இந்த முறையில் சாதத்தை சாப்பிடும்போது, உடல் பருமன் குறைவதோடு மட்டுமல்லாமல், இது எதிர்ப்பு சக்தி கொண்ட ஸ்டார்ச் அளவை 10 மடங்கு உயர்த்தும் என்று தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதேய்மானம் அடைந்த எலும்புகளை சரிப்படுத்த சிறந்த உணவுகள் ! உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கான காரணங்கள் !
Next articleமலேரியா பற்றி நீங்கள் அறிந்திராதவை! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!